உலகம் செய்தி

‘நாட்டை குழப்பத்தில் ஆழ்த்தத் தயாரில்லை’ – பதவி விலக பிரதமர் மறுப்பு!

இக்கட்டான சூழலில் தான் பதவி விலகி நாட்டை குழப்பத்தில் ஆழ்த்தத் தயாரில்லை எனப் பிரதமர் கீயர் ஸ்டார்மர் (Keir Starmer) திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் லேபர் கட்சிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு காரணமாக, பிரதமர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் என அக்கட்சியின் எம்.பி-க்கள் சிலரே பகிரங்கமாக வலியுறுத்தி வருகின்றனர்.

வேல்ஸ் பகுதியில் கடந்த 27 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சியில் இருந்த லேபர் கட்சி, இம்முறை தனது அதிகாரத்தை இழந்துள்ளது.

இங்கிலாந்தில் 1,400-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி Reform UK கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

குறிப்பாக, லேபர் மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சிகளின் கோட்டைகளாகக் கருதப்பட்ட பல கவுன்சில்களை (Councils) அக்கட்சி தன்வசப்படுத்தியுள்ளது.

தற்போதைய அரசியல் சூழலில் லேபர் கட்சியின் தேசிய வாக்கு வங்கி 17 சதவீதமாகக் குறைந்துள்ளதாக பிபிசி கணித்துள்ளது.

பொருளாதார நெருக்கடி மற்றும் அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின் அதிருப்தி ஆகியவையே லேபர் கட்சியின் இந்தத் தோல்விக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகின்றன.

இந்தத் தேர்தல் முடிவுகள் பிரிட்டன் அரசியலில் ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!