இலங்கை

இலங்கை முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை – நால்வர் பலி!

இலங்கை முழுவதும் சீரற்ற வானிலையால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலையால் நால்வர் உயிரிழந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (22) மதியம் வெளியிட்டுள்ள நாளாந்த நிலைவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, நுவரெலியா, கண்டி, பதுளை, குருணாகல், காலி உட்பட நாட்டில் 12 மாவட்டங்களில் நிலவும் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் 2, 395 குடும்பங்களைச் சேர்ந்த 9, 542 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம், மண்சரிவால் 2 வீடுகள் முழுமையாகவும், 422 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.  காலி மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்