ஐரோப்பா முக்கிய செய்திகள்

எப்ஸ்டீன் தொடர்பான முறைப்பாட்டை புறக்கணித்த இங்கிலாந்து காவல்துறை – வழுக்கும் கண்டனம்!

பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) லண்டனில் உள்ள கென்சிங்டன் (Kensington) மற்றும் செல்சியாவில் (Chelsea)  குடியிருப்புகளை வாடகைக்கு எடுத்து அங்கு நான்கு பெண்களை தங்கவைத்திருந்ததாக பிபிசி நடத்திய விசாரணை ஒன்றில் தெரியவந்துள்ளது.

தற்போது பாதிக்கப்பட்ட ஆறு பெண்கள் சாட்சியம் வழங்க முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அவர்கள் ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து அழைத்து வரப்பட்டிருந்ததாகவும்,   பெண்களை ஆட்சேர்ப்பு செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் அவர்கள் எப்ஸ்டீனைச் சந்திப்பதற்காக யூரோஸ்டார் ரயில் மூலம் அடிக்கடி பாரிஸுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

2015 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில் பெருநகரக் காவல்துறையிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டபோதும் எப்ஸ்டீனின் நடவடிக்கைகள் குறித்து இங்கிலாந்து காவல்துறை எந்த விசாரணையையும் மேற்கொள்ளவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அத்துடன் சர்வதேச அதிகாரிகளே இந்த வழக்கை விசாரிக்க மிகவும் பொருத்தமானவர்கள்” என்று பெருநகரக் காவல்துறை கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விசாரணைக்கான வாய்ப்புகள் தவறவிடப்பட்டதற்கு மனித உரிமை வழக்கறிஞர்களும் பாதிக்கப்பட்டவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

என்ன தவறு நடந்தது என்பது குறித்து ஒரு பொது விசாரணை நடத்த வேண்டும் என்றும் தற்போது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்