இலங்கை

பள்ளமடு பகுதியில் கேரள கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு வீதியில் வைத்து நேற்று (1) சனிக்கிழமை மாலை 85 கிலோ கேரள கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து அப்பகுதிக்குச் சென்ற பொலிஸா வாகனம் ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய 85 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் 35 வயதுடைய மன்னார் பேசாலை,மற்றும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.மேலும் இருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவர்கள் பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைக்காக சந்தேக நபர்களும்,மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள்,வாகனம்,மோட்டார் சைக்கிள் ஆகியவை மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.மன்னார் பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்