ஆசியா

டிரம்பின் செயலால் ஜப்பானிய பொருளாதாரத்தில் குழப்பம் ஏற்படக்கூடும் அபாயம்

ஜப்பானிய பொருளாதாரத்தில் குழப்பம் ஏற்படக்கூடும் என ஜப்பானிய மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜப்பானின் பொருளாதாரம் அண்மையில் மேம்படத்தொடங்கியது. ஆனால், டிரம்ப்பின் வரிகள் அதன் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும் என மக்கள் அஞ்சுகின்றனர்.

பொருளாதாரம் மெதுவாக முன்னேறுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் செலவும் ஆடம்பரப் பொருள்களுக்கு மக்கள் செய்யும் செலவும் பொருளாதாரத்தைப் பாதுகாக்க உதவும் என வங்கி தெரிவித்தது.

வரிகளின் தாக்கத்தைப்பற்றி மேலும் விவரமாகப் பேச ஜப்பானின் மத்திய வங்கி ஏப்ரல் 30ஆம் தேதி சந்திக்கவுள்ளது. வட்டி விகிதத்தை 0.5% அளவில் வைத்துக்கொள்ள வங்கி முடிவெடுத்திருக்கிறது.

டிரம்ப் ஜப்பானில் தயாரிக்கப்படும் வாகனங்கள் மீது 25% வரியும் இதர பொருள்களின் மீது 24% வரியும் விதித்துள்ளார்.

ஜப்பானின் பொருளாதாரம் பெரும்பாலும் ஏற்றுமதிகளை நம்பியுள்ளது. ஆனால் இவ்வரிகளால் பொருளாதாரம் 0.8% சரியும் என நிபுணர்கள் ஊகிக்கின்றனர்.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்