உலகம் செய்தி

தோல்வியை உடன்படிக்கையாக சித்தரிக்க ட்ரம்ப் முயற்சி: ஈரான் ராணுவம் பதிலடி!

அமெரிக்காவுடன் பேச்சு நடத்தப்படுகின்றது என டொனால்ட் ட்ரம்ப் கூறிய கருத்தை ஈரான் ராணுவம் முற்றாக நிராகரித்துள்ளது.

அமெரிக்கா தனது தோல்விகளை ஒரு உடன்படிக்கையாகச் சித்தரிக்க முற்படுகின்றது என ஈரானின் லெப்டினன்ட் கர்னல் இப்ராஹிம் சோல்பாகரி Ebrahim Zolfaghari தெரிவித்தார்.

ஈரானிய மக்களுக்கு எதிரான விரோதப் போக்குகள் அமெரிக்காவின் எண்ணத்திலிருந்து முழுமையாக நீக்கப்படும் வரை எந்தவொரு சமரசம் ஏற்பட வாய்ப்பில்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

தற்போதையச் சூழலில் மட்டுமல்லாது, வருங்காலத்திலும் அமெரிக்காவுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளப் போவதில்லை என்பதில் ஈரான் ராணுவம் உறுதியாக உள்ளது என்பதை அவரது கருத்து வெளிப்படுத்துகின்றது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி