இந்தியா செய்தி

உத்தரப்பிரதேசத்தில் மூடுபனி காரணமாக தேநீர் கடைக்குள் மோதிய லாரி – இருவர் மரணம்

Truck crashes into tea stall due to fog in Uttar Pradesh – two dead

உத்தரப்பிரதேசத்தின்(Uttar Pradesh) லம்புவா(Lambua) பகுதியில் அடர்ந்த மூடுபனி காரணமாக ஒரு லாரி தேநீர் கடைக்குள் மோதியதில் லாரி ஓட்டுநர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

தியாராவிலிருந்து(Diyara) லம்புவா(Lambua) நோக்கி வேகமாகச் சென்ற லாரி மூடுபனி காரணமாக ஒரு ஓலை தேநீர் கடையில் மோதி பின்னர் ஒரு மரத்தில் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேநீர் கடை உரிமையாளரின் 28 வயது மகன் ரோஹித்(Rohit) மற்றும் 32 வயது லாரி ஓட்டுநர் அங்கித் பால்(Ankit Pal) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும், ரோஹித்தின் 50 வயது தாயார் ராஜ்குமாரி(Rajkumari), கடையில் இருந்த 55 வயது ஸ்ரீராம்(Sriram) மற்றும் 45 வயது நந்து(Nandu) ஆகியோர் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

நேற்று உத்தரபிரதேசத்தின் யமுனா(Yamuna) விரைவுச்சாலையில் அடர்ந்த மூடுபனி காரணமாக ஏற்பட்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்ததை அடுத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி

இந்தியாவில் 11 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – 13 பேர் பலி!

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி