இலங்கையில் ஊழித்தாண்டவமாடிய டித்வா பேரிடருக்கு இன்றோடு ஓராண்டு
இலங்கையின் பல பகுதிகளிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய டித்வா சூறாவளி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் (26) ஓராண்டு நிறைவடைகின்றது.
கடந்த ஆண்டு இதே நாளில் இலங்கையின் தெற்குக் கடற்பரப்பில் உருவான தாழமுக்கம், பின்னர் ‘டித்வா’ எனப் பெயரிடப்பட்ட வலுவான சூறாவளியாக உருவெடுத்து நாட்டின் பல பகுதிகளிலும் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது.
இந்த சூறாவளியுடன் ஏற்பட்ட கடும் மழை, பலத்த காற்று மற்றும் மண்சரிவுகள் காரணமாக வீதிக் கட்டமைப்புகள், வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பெருமளவில் சேதமடைந்தன.
இந்த அனர்த்தம் காரணமாக 650க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 173 பேர் இதுவரை காணாமல் போயுள்ளனர்.
அனர்த்தத்தில் உயிரிழந்த மற்றும் காணாமல் போனவர்களை நினைவுகூரும் தேசிய சர்வமத நிகழ்வு இன்று (26) பதுளை நகரை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
இதனுடன் இணைந்ததாக நினைவு முத்திரை ஒன்றை வெளியிடுவதுடன், விசேட நூல் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.




