Consent Preferences
இந்தியா செய்தி தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ எனப் பதிவிட்ட மோடி

தமிழகத்தின் மதுரை திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி முருகப் பெருமானைப் போற்றும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தின் மதுரை திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி முருகப் பெருமானைப் போற்றும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பதிவில், ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!’ என்ற பக்தி முழக்கத்தைத் தமிழில் பதிவிட்டுள்ளார். அத்துடன், அதனை ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளிலும் பகிர்ந்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தீபத்தூண் பகுதியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக நீடித்து வரும் சர்ச்சைக்கு மத்தியில் பிரதமரின் இந்தப் பதிவு வெளியாகியுள்ளது.

குறித்த தீபத்தூண் பகுதியில் கடந்த நவம்பர் 24ஆம் திகதி கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது. எனினும், அன்றைய தினம் வழக்கமான இடமான உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் மாத்திரமே தீபம் ஏற்றப்பட்டது.

இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியதாகக் கூறி தமிழக அரசின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம் ஆரம்பித்துள்ளது.

மேலும், திருப்பரங்குன்றம் கோயிலின் அறங்காவலர் குழுவையும் இடைநிறுத்திய நீதிமன்றம், ஓய்வுபெற்ற இரு உயர் நீதிமன்ற நீதிபதிகளை நிர்வாகப் பொறுப்புகளுக்காக நியமித்துள்ளது.

இந்நிலையில், இன்று (28) தீபத்தூண் பகுதியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளதுடன், நிகழ்வை அமைதியாக நடத்துவதற்காக மத்திய ரிசர்வ் பொலிஸ் படையினரையும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், அருகிலுள்ள தர்காவின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும், தீபம் ஏற்றப்படும் இடம் தர்காவிலிருந்து குறைந்தது 50 மீற்றர் தொலைவில் இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி