பொழுதுபோக்கு

காதலும் இல்லை கத்தரிக்காயும் இல்லை! கடுப்பாகினார் அஜித்தின் மச்சினன்

கடந்த சில தினங்களுக்கு முன்பு, நடிகை ஷாலினியின் அண்ணனும், அஜித்தின் மச்சினனுமான ரிச்சர்ட் ரிஷி, நடிகை யாஷிகாவை காதலித்து வருவதாக ஒரு தகவல் தீயாகப் பரவி வந்த நிலையில், இது குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.

தற்போது ரிச்சர்ட் பிரபல பத்திரிக்கை ஒன்றில் இந்த காதல் விவகாரம் குறித்து பேசி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

‘சில நொடிகளில்’ என்ற திரைப்படத்தில் நானும், யாஷிகாவும் இணைந்து நடித்து வருகிறோம். அந்த படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் இவை. அதனை சோசியல் மீடியாவில் எதார்த்தமாக ஷேர் செய்தேன். ஆனால் இதை பலர் தவறாக எடுத்துக் கொண்டனர்.

இத்தனை நாட்கள் வெளிநாட்டில் இருந்ததால், இது பற்றி விளக்கம் கொடுக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் தங்கள் இருவருக்கும் இடையே காதலும் இல்லை கத்தரிக்காயும் இல்லை என ரிச்சர்ட் கூறியுள்ளார்.

ரிச்சர்ட் – யாஷிகா இணைந்து நடித்துவரும் சில நொடிகள் படத்தை, கன்னட இயக்குனர் வினை பரத்ராஜ் இயக்கி வருகிறார். அது மட்டும் இன்றி, இப்படத்தை ஜீன்ஸ், தாம் தூம், கோச்சடையான் போன்ற படங்களை தயாரித்த முரளி மனோகரன் தயாரித்து வருகிறார்.

யாஷிகா – ரிச்சர்ட் நடித்து வரும் இந்த படத்தில், இருவரும் சேர்ந்து… ஹாலிடேவுக்கு வெளியே போவது போல் சில காட்சிகள் இருக்கிறதாம். இந்த காட்சிகள் படமாக்கப்பட்ட போது, எடுத்த புகைப்படங்களையும், செல்ஃபி புகைப்படங்களை ஷேர் செய்தார் ரிச்சர்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்