இந்தியா

பெண் வேடமிட்டு விடுதிக்குள் நுழைந்த இளைஞர்… துவைத்து எடுத்த வார்டன்!

பெண் வேடமிட்டு பெண்கள் விடுதிக்குள் நுழைந்து வாலிபர் தர்ம அடி வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் காதலியைப் பார்ப்பதற்கான கதாநாயகன், தனது நண்பருடன் பெண் வேடமிட்டு விடுதிக்குள் செல்வது போல பல திரைப்படங்களில் பார்த்திருப்போம். அப்படி சினிமா பாணியில் பெண்கள் விடுதிக்குள் நுழைந்த வாலிபர் ஒருவர், வார்டனிடம் சிக்கிக் கொண்ட வீடியோ தான், தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

25 வயது வாலிபர் ஒருவர், பெண் வேடமணிந்து பெண்கள் விடுதிக்குள் நுழைந்துள்ளார். அப்போது அவரை விடுதியின் பெண் வார்டன் பார்த்து விட்டு சத்தம் போடுகிறார். இதையடுத்து மாணவிகள்,ஊழியர்கள் திரண்டு விடுகின்றனர். அவர்களிடம் பெண் வேடமிட்ட வாலிபர் சிக்கிக் கொள்கிறார். அவரை கையில் கிடைத்த பொருளால் பெண் வார்டன் அடித்து துவைக்கிறார். அத்துடன் மாணவிகள், ஊழியர்கள் அந்த வாலிபரை அடித்து இழுத்துச் செல்கின்றனர். இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பான வீடியோ @gharkalesh என்ற எக்ஸ் கணக்கில் இருந்து தற்போது வெளியிடப்பட்டுள்ளளது, பெண் வேடமணிந்து பெண்கள் விடுதிக்குள் பதுங்கியிருந்த ஆண் பிடிபட்டார் என்ற தலைப்புடன் பகிரப்பட்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content