உலகம்

10,000 ஆண்டுகள் ஓடக்கூடிய மிகப்பெரிய கடிகாரத்தை உருவாக்கிய பெரும் பணக்காரர்!

10,000 ஆண்டுகள் ஓடக்கூடிய மிகப்பெரிய கடிகாரத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

உலகப் பெரும் பணக்காரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் Jeff Bezos, 10,000 ஆண்டுகள் ஓடக்கூடிய கடிகாரத்தை உருவாக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்.

கடந்த 2011 ஆண்டு முதல் இந்த கடிகாரத்தை உருவாக்குவதற்கு அவர் நிதி வழங்கி வருகிறார். அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் Jeff Bezos, 500 அடி உயரம் கொண்ட இந்த கடிகாரத்தை டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள Sierra Diablo மலையில் அவருக்கு சொந்தமான இடத்தில் உருவாக்கி வருகிறார்.

இந்த கடிகாரத்திற்கு Clock of the Long என பெயரிட்டுள்ளனர். இந்த கடிகாரத்திற்கான திட்டத்தை தீட்டியவர் Danny Hillis என்பவராகும். இந்த கடிகாரத்தை உருவாக்கும் திட்டத்திற்கு Jeff Bezos இதுவரை 42 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளார்.

மேலும், இந்த கடிகாரத்தின் நொடிமுள் ஒரு ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே நகரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு வருடம் என்பது ஒரு நொடியாக அளவிடப்படுவதாக Jeff Bezos தெரிவித்துள்ளார்.

இந்த மணியளவின் படி இந்த கடிகாரம் 10,000 ஆண்டுகளுக்கு இயங்கப்போவதாகக் கூறியுள்ளார். ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த கடிகாரம் ஒலி எழுப்பும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இது நீண்டகால சிந்தனைக்கான நினைவுச்சின்னமாக உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. இன்னும் 10,000 ஆண்டுகள் மனிதர்களால் பூமியில் வாழ முடியுமா என எழும் கேள்விகளுக்கு அந்த நம்பிக்கையை விதைக்கும் நோக்கமே இந்த கடிகாரம் என அந்நிறுவனம் தனது வலைத்தள பக்கத்தில் பதிலளித்துள்ளது.

இந்த கடிகாரத்தின் முதல் ஒலி இன்னும் 1000 ஆண்டுகளுக்கு பின்னரே கேட்கும் என்ற நிலையில், அதனை கேட்கப்போகும் உயிர்களை உருவாக்கும் உயிர்கள் கூட இன்னும் உருவாகவில்லை என்பது வியப்பை ஏற்படுத்துகிறது!

(Visited 3 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content