ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரம் – விடாப்பிடியாக நிற்கும் ஈரான்
ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்காகத் தான் முன்வைத்த நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்கும் வரை, அதனைத் திறக்கப் போவதில்லை என்று ஈரான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையில், ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது தொடர்பான ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தான் மற்றும் கத்தார் வழியாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.




