ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு கோரிக்கை

ஆஸ்திரேலியா விக்டோரியா மாநிலத்தில் அரசியல் வாதிகளுக்கு விடுக்கப்படும் உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்களைத் தொடர்ந்து, தங்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்குமாறு மாநில அரசியல்வாதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்னும் நான்கு வாரங்களில் முன்கூட்டிய வாக்களிப்பு நிலையங்கள் திறக்கப்படவுள்ள நிலையில், அங்கு செல்வதற்கே சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயக்கம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா விக்டோரியா மாநிலத்தில் அரசியல் வாதிகளுக்கு விடுக்கப்படும் உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்களைத் தொடர்ந்து, தங்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்குமாறு மாநில அரசியல்வாதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்னும் நான்கு வாரங்களில் முன்கூட்டிய வாக்களிப்பு நிலையங்கள் திறக்கப்படவுள்ள நிலையில், அங்கு செல்வதற்கே சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயக்கம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விக்டோரியா மாநிலத் தேர்தல் நவம்பர் 28ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநில பிரீமியர் பென் கரோல், இன்று தேர்தல் ஆணையருடன் கலந்துரையாடவுள்ளார்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் ஹெய்ன்ஸ் மீது திங்கட்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பு குறித்துக் கலந்துரையாடுவதற்காக முதல்வர் விசேட அமைச்சரவைக் கூட்டத்தையும் கூட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஹெலன் ஹெய்ன்ஸ் மீதான தாக்குதலுடன் தொடர்புடையதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிரெண்டன் நியூஜென்ட் மீது, பொதுநலவாய அரச அதிகாரி ஒருவருக்குத் தீங்கு விளைவித்தமை தொடர்பான கூட்டாட்சி குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றத்துக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

எனினும், மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான இத்தகைய செயல்களைக் கையாள்வதற்காக இதேபோன்ற குற்றவியல் சட்ட ஏற்பாடு இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால், மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இதேபோன்ற சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனச் சில அரசியல்வாதிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

செவ்வாய்க்கிழமை கருத்துத் தெரிவித்த பிரீமியர் பென் கரோல், வாக்களிப்பு நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிப்பது தொடர்பாக அரசாங்கம், பொலிஸார் மற்றும் தேர்தல் ஆணைக்குழு ஆகியவற்றுக்கு இடையில் தீவிரமான கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட வேண்டும் என்றும், மாநில நாடாளுமன்றமும் விக்டோரியா தேர்தல் ஆணைக்குழுவும் மக்கள் பிரதிநிதிகளைப் பாதுகாப்பதற்கு மேலதிக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பெரும்பாலானோர் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசியல் விவாதங்களில் அதிகரித்துவரும் பகைமை, ஜனநாயகச் செயற்பாடுகளையே பாதிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

சமூக ஊடகங்களின் வளர்ச்சி காரணமாக அரசியல்வாதிகளுக்கு எதிரான அவதூறுகள், துன்புறுத்தல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாகப் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இணையவழித் தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவதால், சிலர் அரசியலில் இருந்து ஓய்வுபெற்றுள்ளதாகவும், மேலும் சிலர் அரசியலில் இருந்து விலகுவது குறித்து பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் பிரீமியர் ஜசிந்தா ஆலன் தனது பதவிக்காலத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொல்லப்படக்கூடும் என்ற அச்சம் தமக்கு ஏற்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.

அரசியல் பிரதிநிதிகள் மீதான அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், விக்டோரியா மாநிலத் தேர்தலுக்கு முன்னதாகப் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி