ஐரோப்பா

பிரான்சில் பெண்களை ரகசியமாக படம் பிடித்த நபர்; கணினியை ஆராய்ந்தபோது பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பிரான்ஸ் நாட்டவர் ஒருவர் பெண்கள் உடை மாற்றும் அறைகளில் ரகசியமாக கமெராவை மறைத்து வைத்தது மற்றும் அவர்களுக்குத் தெரியாமல் மோசமாக படம் பிடித்தது ஆகிய குற்றங்களுக்காக பொலிஸில் சிக்கினார்.பொலிஸார் அவரது கணினியை ஆராய்ந்தபோது, அவர் வேறொரு பயங்கர குற்றச்செயலில் ஈடுபட்டுவந்தது தெரியவந்ததையடுத்து கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

பிரான்சிலுள்ள Mazan என்னும் இடத்தைச் சேர்ந்த டொமினிக் என்னும் அந்த நபர், பெண்களை ஆபாசமாக படம் எடுத்ததாக சந்தேகத்தின் பேரில் சிக்கியதைத் தொடர்ந்து, அவரது கணினியை பொலிஸார் ஆராய்ந்தனர்.டொமினிக், ‘துஷ்பிரயோகங்கள்’ என பெயரிடப்பட்ட ஒரு USB டிரைவை வைத்திருந்திருக்கிறார். அதிலுள்ள விடயங்களைப் பார்த்த பொலிஸார் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள்.

How to Use a USB Flash Drive on Windows PC - Kingston Technology

அந்த USB டிரைவில், பல வீடியோக்கள் இருந்துள்ளன. அவை அனைத்தும், டொமினிக்கின் மனைவியை பல ஆண்கள் வன்புணரும் பயங்கர காட்சிகள்.நடந்தது என்னவென்றால், தினமும் தன் மனைவியின் இரவு உணவில் மயக்க மருந்து கலந்த டொமினிக், அவர் மயங்கியதும், ஆண்களை வரவழைத்து தன் மனைவியை வன்புணரச் செய்து, அந்தக் காட்சிகளை வீடியோ எடுத்துள்ளார்.

இந்த விடயம் ஓரிரண்டு முறை அல்ல, 2011ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகளாக நடந்து வந்துள்ளது.

டொமினிக்கும், அவரது மனைவியை வன்புணர்ந்த 51 ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தான் இத்தனை ஆண்டுகளாக தன் கணவனின் அனுமதியுடனே துஷ்பிரயோகம் செய்யப்பட்டுவந்ததை அறிந்து கண்ணீர் விட்டுக் கதறிய டொமினிக்கின் மனைவி விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.இந்த வழக்கு, பிரான்சில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

(Visited 5 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content