இலங்கை

மறுசீரமைப்பு தொடர்பில் தெளிவுப்படுத்துங்கள் -நாமல் ராஜபக்ஷ!

மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெளிவுப்படுத்த வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வழக்கு விசாரணை ஒன்றுக்காக நீதிமன்றத்தில் இன்று (22.06) முன்னிலையாகியிருந்த அவர், ஊடகவியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே மேற்படி கூறினார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,  மறுசீரமைக்கும் நிறுவனங்கள் எவை? மறுசீரமைப்புக்கான காரணங்கள் என்ன? அந்த நிறுவனங்கள் இலாபமிட்டும் நிறுவனங்கள் என்றால் அதனை ஏன் மறுசீரமைப்பு செய்கிறீர்கள்?  என்பதை நாட்டு மக்களுக்கும்,  பாராளுமன்றத்துக்கும் தெளிவுப்படுத்த வேண்டும்.

பாராளுமன்றத்திலும்,  மக்களுக்கும் விசேடமாக அந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் மறுசீரமைப்பு தொடர்பில் தெளிவுப்படுத்த வேண்டும் என்றார்.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்