இலங்கை

இலங்கையில் சடுதியாக குறைந்த லிட்ரோ சமையல் எரிவாயு விலை!

இலங்கையில் நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை, 204 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

விலைத்திருத்தத்திற்கு அமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 2 ஆயிரத்து 982 ரூபாய் என்ற புதிய விலைக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

கொழும்பில் தற்சமயம் இடம்பெற்று வரும், செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, அந்த நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

அதேநேரம், 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 83 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை ஆயிரத்து 198 ரூபாவாகும்.

இதுதவிர, 2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 37 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 561 ரூபாய் என்ற புதிய விலைக்கு அதனை விற்பனை செய்யவுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்