மத்திய கிழக்கு

அர­பு­ நா­டுகள் ஒற்­று­மை­யாக செயற்­படுவது அவ­சியம் குறித்து அரபுலீக் மாநாட்டில் வலியுறுத்தல்!

பிராந்­தியப் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­பத்தில் அர­பு­ நா­டுகள் ஒற்­று­மை­யாக செயற்­படுவது அவ­சியம் என அரபு லீக் உச்­சி­மா­நாட்டில் வெளி­யி­டப்­பட்ட ‘ஜெத்தா பிர­க­ட­னத்தில்’ கோரப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் அரபு லீக்கில் சிரி­யாவை மீண்டும் இணைத்­த­மைக்கும் இப்­பி­ர­க­டனம் வர­வேற்பு தெரிவித்­துள்­ளது.

அரபு லீக்கின் 32ஆவது உச்­சி­மா­நாடு சவூதி அரே­பி­யாவின் ஜெத்தா நகரில் நடைபெற்ற நிலையில்,  ஜெத்தா பிர­க­டனம்’ வெளி­யி­டப்­பட்­டது.

குறித்த பிரகடனத்தில்,  பலஸ்­தீனப் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்­கான அரபு சமா­தான முன்­மு­யற்­சி­களை இப்­பி­ர­க­டனம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

சூடானில் பதற்­றத்தை தணிக்கவும், லெபனான் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கும்  அவ­சி­ய­மான சீர்தி­ருத்­தங்­களை மேற்­கொள்ள அந்­நாட்டு ஜனா­தி­ப­தியை இப்­பி­ர­க­டனம் கோரி­யுள்­ளது.

யேமனில் பாது­காப்ப,  ஸ்திரத்­தன்­மையை ஊக்­கு­விப்­பற்­கான நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஆத­ரவு தெரிவிக்­கப்­பட்­டுள்­ளது.

அரபு லீக் உச்சி மாநாட்டில் பங்­கு­பற்­றிய சிரிய ஜனா­தி­பதி பஷர் அல் அஸாத்தை அரபு நாடு­களின் தலை­வர்கள் வர­வேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.