அரசியல் பொழுதுபோக்கு

அரசியல் கட்சியை ஆரம்பிக்க நாள் குறித்த விஜய்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

தளபதி விஜய் ஏற்கனவே அரசியல் வருகை குறித்து அறிவிக்கும் விதத்தில், பல்வேறு விஷயங்களை செய்து வரும் நிலையில், விரைவில் அரசியல் துவங்க உள்ளதை அதிகார பூர்வமாக அறிவிக்க நாள் குறித்துவிட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் மக்கள் இயக்கம் மூலம் அரசியல் துவங்க பிள்ளையார் சுழியை போட்டார். கடந்த 2022 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், விஜய் மக்கள் இயக்கம் மூலம் போட்டியிட்ட பலர் வெற்றிபெற்றனர். வெற்றி பெற்றவர்களை நேரில் அழைத்து தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மேலும் விஜய் மக்கள் இயக்கம் இயக்கம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் விஜய், சமீபத்தில், தமிழகத்தில் உள்ள 234 தொகுதியிலும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண்களை பெற்று தேர்ச்சியடைந்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத் தொகை கொடுத்து பாராட்டினார்.

தற்போது விஜய் அரசியல் கட்சியை விரைவில் துவங்க நாள் குறித்து விட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி, அதாவது பெரியாரின் பிறந்தநாள் அன்று விஜய் தன்னுடைய அரசியல் கட்சியை துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகார பூர்வ தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

(Visited 4 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக

You cannot copy content of this page

Skip to content