இந்தோனேசிய அரசாங்கத்தை ஆதரிக்கும் யூடியூப் சேனல்கள் முடக்கம்
இந்தோனேசிய அரசாங்கத்தை ஆதரிக்கும் 19,000-க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் நீக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் இந்தோனேசிய டிஜிட்டல் விவகாரங்கள் அமைச்சகம் யூடியூபிடம் விளக்கம் கோரியுள்ளது. கூகுள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையொன்றில், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்தோனேசிய அரசாங்கத்துடன் தொடர்புடைய 19,372 யூடியூப் சேனல்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேள்விக்குட்பட்ட யூடியூப் சேனல்கள், இந்தோனேசியா மற்றும் அதன் ஆட்சிக்கு ஆதரவான உள்ளடக்கங்களை ஊக்குவித்து வந்ததாகவும், அவற்றில் சில அரசாங்கத்தை விமர்சிப்பவர்களுக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்ததாகவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



