ஜெர்மனியில் ஆளுங்கட்சிக்கு விழுந்தது “அரசியல் பேரிடி”
ஜெர்மனியில் நடைபெற்ற பிராந்தியத் தேர்தலில் ஆளும் பழமைவாதக் கட்சி (CDU) வரலாற்றுப் பின்னடைவைச் சந்தித்ததைத் தொடர்ந்து, நாட்டின் சான்சலர் பிரீட்ரிச் மெர்ஸ் (Friedrich Merz) தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடி வருகிறார். அவரது விரும்பத்தகாத பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்துக் கூட்டணிக் கட்சிகளுக்குள் முரண்பாடுகள் வெடித்துள்ளன. வடகிழக்கு மாநிலமான மெக்லன்பர்க்-மேற்கு பொமரேனியாவில் (Mecklenburg-Western Pomerania) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் ஆளுங்கட்சி அடைந்த தோல்வியை “பேரழிவு” என மெர்ஸ் விவரித்துள்ளார். அம்மாநில வரலாற்றிலேயே முதன்முறையாக மெர்ஸின் கட்சி, நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான […]













