இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு முடிவு கட்டுங்கள்: அமெரிக்க மண்ணில் லெபனான் ஜனாதிபதி முழக்கம்
தெற்கு லெபனானில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தால் மட்டுமே ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயுதங்களைக் களைவது சாத்தியமாகும் என்று லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவ்ன் (Joseph Aoun) தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மற்றும் அவரது தூதுக்குழுவினரைக் கெளரவிக்கும் வகையில், அமெரிக்காவிற்கான லெபனான் தூதர் நாதா ஹமாதே மொஅவாத் (Nada Hamadeh Moawad) வாஷிங்டன் டி.சி.யில் ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவ்ன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அமெரிக்க நாடாளுமன்ற (காங்கிரஸ்) உறுப்பினர்கள் […]













