உலகம் முக்கிய செய்திகள்

வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – பல பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை

  • June 25, 2026
  • 0 Comments

வெனிசுலா தலைநகர் கராகஸ் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இதன் அதிர்வுகள் கொலம்பியாவிலும் உணரப்பட்டுள்ளன. மொன்டால்பன் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகவும், 13.2 கிலோமீட்டர் (8.2 மைல்கள்) ஆழமாகவும் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. கராகஸில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும், குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கிடையே  நிலநடுக்கத்தை தொடர்ந்து வெனிசுலா, அருபா மற்றும் பொனாயர் ஆகிய நாடுகளுக்கு சுனாமி அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகம்

அமெரிக்காவின் 51 ஆவது மாநிலமாகும் வெனிசுலா – ட்ரம்ப் வெளியிட்ட புகைப்படம்!

  • May 13, 2026
  • 0 Comments

வெனிசுலாவை அமெரிக்காவின் ஒருங்கிணைந்த பகுதியாக இணைக்கும் வரைப்படத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சோசியல் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வரைப்படத்தில் அமெரிக்கக் கொடியும், ’51வது மாநிலம்’ என்ற குறிப்பும் இடம்பெற்றுள்ளன. தனது நாடு அமெரிக்காவின் 51 ஆவது மாநிலமாக மாறுவதை ஒருபோதும் கருத்தில்கொள்ளவில்லை என தற்போதைய ஜனாதிபதியான டெல்சி ரோட்ரிக்ஸ் ( Delcy Rodriguez) கூறியதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. இதற்கிடையே வெனிசுலாவின் எதிர்க்கட்சி தேர்தல்களை நடத்தக் கோரியுள்ளது.  , மே […]

உலகம்

மத்தியக் கிழக்கு பதற்றம் – எண்ணெய் ஏற்றுமதியை அதிகரித்த வெனிசுலா!

  • May 3, 2026
  • 0 Comments

அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பாவிற்கான ஏற்றுமதிகள் வேகமெடுத்ததால், வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதி ஏப்ரல் மாதத்தில் ஒரு நாளைக்கு 1.23 மில்லியன் பீப்பாய்களாக உயர்ந்தது. வெனிசுலாவின்  அரசுக்குச் சொந்தமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமான (PDVSA) வழங்கிய கப்பல் போக்குவரத்துத் தரவுகள் மற்றும் ஆவணங்களின்படி, மார்ச் மாத அளவோடு ஒப்பிடுகையில் அவர்களின் எரிபொருள் ஏற்றுமதி 14 சதவீதம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தரவுகளின்படி, மார்ச் மாதத்தில் எரிபொருளை ஏற்றிச் சென்ற 61 கப்பல்கள் வெனிசுலாவிலிருந்து புறப்பட்டன, இந்த எண்ணிக்கை […]