ஐரோப்பா

பல்கேரியாவில் சோகம் – பலவாகனங்கள் மோதி விபத்து, 11 பேர் பலி

  • November 10, 2026
  • 0 Comments

பல்கேரியாவில் பல வாகனங்கள் ஒன்றோடு  ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆறு வழித்தடங்களில் வாகனங்கள் மோதிக்கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தலைநகர் சோஃபியாவையும் கிழக்கு நகரமான புர்காஸையும் இணைக்கும் இந்த முக்கிய நெடுஞ்சாலையில், விபத்து நிகழந்துள்ளது. பனிமூட்டமான வானிலையே விபத்து ஏற்பட காரணம் எனக் குறிப்பிட்டுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.