அமெரிக்கச் சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்தினால் விசா இரத்து
வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வருகை தந்து, அந்த நாட்டு குடிமக்களின் வரிப்பணத்தில் வழங்கப்படும் சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. அமெரிக்கக் குடிமக்களின் வரிப்பணத்திலிருந்து நிதியளிக்கப்படும் சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்தும் அல்லது அவற்றைச் சார்ந்திருக்கும் நபர்கள் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. விசா (Non-immigrant visa) வைத்திருப்பவர்களின் விசாக்கள் உடனடியாக இரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விசா இரத்து செய்யப்படுவதுடன், அத்தகைய நபர்கள் எதிர்காலத்தில் அமெரிக்க […]




