ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு – 17, 18 ஆம் திகதிகளில் முடங்கும் சேவை
ரயில் பொது மேலாளரின் பதவி குறித்து அரசாங்கம் இன்னும் ஒரு திட்டவட்டமான முடிவை எடுக்காததால், முன்னர் அறிவிக்கப்பட்டப்படி செப்டம்பர் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் திட்டமிட்டப்படி போராட்டத்தை முன்னெடுக்க ரயில்வே தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. ரயில்வே தொழிற்சங்கங்களின் இணை ஒருங்கிணைப்பாளர் கசுன் சாமர ஜயசேகர இன்று (14) வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்தனை தெரிவித்தார். இந்தப் போராட்ட நடவடிக்கை தொடர்பாக, போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளருக்கும் கூட்டு ரயில் தொழிற்சங்கங்களின் தலைவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே போக்குவரத்து அமைச்சகத்தின் […]




