ஐரோப்பா

கரையை கடந்தது சார்லஸ் புயல் – போர்த்துக்களில் 200 விமானங்கள் இரத்து

  • November 11, 2026
  • 0 Comments

போர்த்துக்களில்  சார்லஸ் புயல் இன்று கரையை கடந்துள்ளது. இருப்பினும் கனமழை மற்றும் காற்று நீடிப்பதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 200இற்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டதுடன், பாடசாலைகள் மற்றும் பொதுச் சேவைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இதனிடையே சார்லஸ் புயல் ஏற்கனவே மடீரா தீவுக்கூட்டத்தைத் தாக்கியமையால், சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மரங்கள் சாய்ந்துள்ளன. மேலும் அவசரக்காலக் குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.