உலகம் செய்தி

அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்பட வேண்டாம் – வளைகுடா நாடுகளுக்கு தெஹ்ரான் எச்சரிக்கை

மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் தனது உரிமையை ஈரான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

அதேநேரம்  அமெரிக்காவுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டாம் என வளைகுடா நாடுகளுக்கு  எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

ஓமானுக்கு அருகே கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் தெஹ்ரான் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரிபாபாடி (Kazem Gharibabadi) எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில், “தெளிவற்ற ஏற்பாடுகள், மாற்றுப் பாதைகள் அல்லது ஈரானின் பரிசீலனைகளுக்கு அப்பாற்பட்ட முடிவெடுக்கும் முறைகளுடன்” பயணிக்கும் கப்பல்களுக்கு ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகப் பாதுகாப்பான பயணத்திற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

எந்தவொரு நம்பகமான கட்டமைப்பும் ஈரானுடனான ஒருங்கிணைப்பு மற்றும் இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஐந்தாவது பத்தியின் விதிகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்,” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜலசந்தியைக் கடந்து செல்லும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கலாம் என்ற ஈரானின் வலியுறுத்தலை வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நிராகரித்து அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் தெஹ்ரானின் இந்த கருத்துக்கள் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி