உலகம்

பெய்ஜிங்கில் பரபரப்பு – 108 மாடிக் கட்டிடத்தில் மோதிய விமானம்

சிறிய ரக விமானம் ஒன்று பெய்ஜிங்கின் மிக உயரமான கட்டிடத்தில் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து 108 மாடிகளைக் கொண்ட குறித்த கட்டிடம் சுற்றிவளைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அப்பகுதியூடான சாலைப் போக்குவரத்து மூடப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிகாரிகள் அவ்வழியே சென்றவர்களை  சம்பவத்தை  படம்பிடிப்பதைத் தடுத்துள்ளனர்.

பொலிஸார், தாங்கள் எடுத்த படங்களை நீக்குமாறு தனிநபர்களுக்கு அறிவுறுத்தியுடன், மக்களைக் கட்டிடத்திலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகளிடமிருந்து உடனடியாக அதிகாரப்பூர்வமான கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்