ஐரோப்பா

உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்த ரஷ்ய கடும்போக்காளர்கள் அழைப்பு

உக்ரைனின் தொடர் தாக்குதல்கள் காரணமாக அதிருப்தி அடைந்துள்ள ரஷ்ய ஆதரவாளர்கள் இராஜதந்திர வழிகளை கைவிட்டு போரை தீவிரப்படுத்துமாறு புட்டினிடம் வலியுறுத்தியுள்ளனர்.

இவ்வாறான கோரிக்கைகள் புதியதல்ல என்றபோதும்   இந்த மாதம் உக்ரைன் மொஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மற்றும் கிரிமியாவை இலக்காகக் கொண்டு நடத்திய  தாக்குதல்களும், பயணிகள் பேருந்துகள் மீது நடத்தப்பட்டதாக ரஷ்யா கூறிய இரண்டு கொடிய தாக்குதல்களும், அந்தக் கோரிக்கைகளை மேலும் கூர்மையாக்கித் தீவிரப்படுத்தியுள்ளன.

இந்த கோரிக்கைளில்  முழுமையான அணிதிரட்டல்,  கீவ்வின் அரசாங்கப் பகுதியை அழித்தல், ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியைக் கொலை செய்தல் மற்றும் ஐரோப்பிய ஆளில்லா விமானத் தொழிற்சாலைகள் மீது தாக்குதல் நடத்துதல் உள்ளிட்டவை அடங்கும்.

அதேநேரம் சில கடும்போக்காளர்கள், தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு கிரெம்ளின் தலைவரிடம் கூட அழைப்பு விடுத்துள்ளனர்.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்