ஈரான் முழுமையாக அழிக்கப்படும்: ட்ரம்ப் ஆவேசம்!
அமெரிக்க கப்பல்கள்மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், அந்தநாடு முழுமையாக அழிக்கப்படும் என்று டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹார்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களை மீட்பதற்கான ‘Project Freedom’ என்ற நடவடிக்கையை அமெரிக்கா தொடங்கியுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தெரிவித்துள்ளது. இந்நிலையிலேயே அமெரிக்கக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், அந்த நாடு முழுமையாக அழிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். சமீபத்திய மோதல்களில் ஈரானிய படகுகள் மற்றும் ஏவுகணைகளை அமெரிக்கா தாக்கி அழித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். […]













