இலங்கை செய்தி

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற வேன் விபத்து: 13 பேர் காயம்!

கண்டி மாவட்டத்துக்குட்பட்ட நாவலப்பிட்டி, கெட்டபுலாவிலிருந்து ஹரங்கல நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேனொன்று இன்று (05) காலை விபத்துக்குள்ளானதில் 13 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை 7.00 மணியளவில், நாவலப்பிட்டி – திஸ்பனே சந்தி பகுதியில் குறித்த வேன் பயணித்துக்கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த 13 மாணவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் வேனின் சாரதியும் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து குறித்து நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

க.யோகா

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!