இலங்கைக்குக் கைகொடுத்த பிலிப்பைன்ஸ்!
இலங்கையில் அண்மையில் டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து, மறுசீரமைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்காக பிலிப்பைன்ஸ் அரசாங்கம் 100,000 அமெரிக்க டொலரை நிதியுதவியாக வழங்கியுள்ளது. இந்த நிதியுதவியை இலங்கையிலுள்ள பிலிப்பைன்ஸ் தூதுவர் நினா பி. கெய்ங்லெட் (Nina P. Cainglet), இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளதாக தனது எக்ஸ் (X) தளத்தில் அறிவித்துள்ளார். அதில், கடினமான இந்த மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் தருணத்தில், பிலிப்பைன்ஸ் அரசாங்கமும் அந்நாட்டு மக்களும் இலங்கைக்கு வழங்கிய […]













