சிறைத் தண்டனை குறைப்பு: மலேசிய முன்னாள் பிரதமருக்கு வீட்டுக் காவல்
பில்லியன் கணக்கிலான டாலர் நிதி மோசடி தொடர்பான வழக்கில் தண்டனை பெற்றுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக், தனது எஞ்சிய தண்டனைக் காலத்தை வீட்டுக் காவலில் அனுபவிக்க, மன்னர் தலைமையிலான மலேசிய மன்னிப்பு வாரியம் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
2009 முதல் 2018 வரை பிரதமராகப் பதவி வகித்த 73 வயதான நஜீப், அதிகாரத்தில் இருந்தபோது நிறுவிய ‘1மலேசியா டெவலப்மென்ட் பெர்ஹாட்’ (1MDB) என்ற அரசு முதலீட்டு நிதியத்தில் இருந்து பல பில்லியன் டாலர்களை மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
அவரது வீட்டுக் காவல் தண்டனை ஆகஸ்ட் 23, 2028 வரை அமுலில் இருக்கும் என்று பிரதமர் அலுவலகத்தின் சட்டத் துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.




