இலங்கை, பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர்கள் சந்திப்பு
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் முகமட் அலி, இலங்கை பாதுகாப்புச் செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். 6வது பாகிஸ்தான்-இலங்கை ஆயுதப் படைகளின் பாதுகாப்பு உரையாடலில் பங்கேற்பதற்காக கொழும்பு வந்த லெப்டினன்ட் ஜெனரல் முகமட் அலி, பாதுகாப்பு அமைச்சின் தலைமையகத்தில், இலங்கை பாதுகாப்பு செயலாளரைச் சந்தித்துள்ளார். இந்தக் கலந்துரையாடல்களின்போது, இரு பாதுகாப்பு அதிகாரிகளும், நடைபெற்றுவரும் பாதுகாப்பு உரையாடல், இராணுவ ஒத்துழைப்பு, பயிற்சி வாய்ப்புகள், பாதுகாப்புப் பரிமாற்றங்கள் […]













