இந்தியா செய்தி

தமிழகத்துக்காகவே மேகேதாட்டு அணை கட்டுகிறோம்: கர்​நாடக முதல்​வர்

“மேகே​தாட்டு அணை கர்​நாடகா​வுக்​காக அல்ல, தமி​ழ​கம் மற்​றும் புதுச்​சேரி​யின் பயன்​பாட்​டுக்​காகவே கட்​டப்​பட​வுள்​ளது” என கர்​நாடக முதல்​வர் டி.கே சிவக்​கு​மார் தெரி​வித்​துள்​ளார்.

“மேகே​தாட்டு அணை கர்​நாடகா​வுக்​காக அல்ல, தமி​ழ​கம் மற்​றும் புதுச்​சேரி​யின் பயன்​பாட்​டுக்​காகவே கட்​டப்​பட​வுள்​ளது” என கர்​நாடக முதல்​வர் டி.கே சிவக்​கு​மார் தெரி​வித்​துள்​ளார்.

கோவளத்​தில் நேற்று நடை​பெற்ற தென்​மாநில முதல்வர்கள் மாநாட்டில் பங்​கேற்று உரையாற்று கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” இந்​தி​யா​வின் மொத்த உள்​நாட்டு உற்​பத்​தி​யில் 33 சதவீதத்​துக்​கும் அதி​க​மாக தென்மாநிலங்கள் பங்​களிக்​கின்​றன. இதில் கர்​நாட​கா, நாட்​டின் மென்​பொருள் ஏற்​றும​தி​யில் 42 சதவீதத்​தை​யும், விமானத் துறை​யில் 60 சதவீதத்​தை​யும் அளிக்​கிறது.

இருப்​பினும், 15-வது நிதி​யமைப்​பில் கர்​நாடகா​வுக்​கான நிதிப் பகிர்வு 4.7 சதவீதத்​தி​லிருந்து 3.6 சதவீத​மாகக் குறைக்​கப்​பட்​ட​தால், ரூ. 65ஆ​யிரம் கோடி இழப்பு ஏற்​பட்​டுள்​ளது.

நாட்​டின் வளர்ச்​சிக்கு அதி​கப் பங்​களிக்​கும் மாநிலங்​கள் தண்​டிக்​கப்​படக் கூடாது; தற்​போதைய இடங்​களின் எண்​ணிக்​கை​யிலேயே உடனடி​யாக நடை​முறைப்​படுத்த வேண்​டும்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிறகு அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறுகை​யில்,

“தொகுதி மறு​வரையறை நடவடிக்​கை​களில், 1971-ம் ஆண்டு மக்​கள் தொகைக் கணக்​கெடுப்​பையே அடிப்​படை​யாகக் கொள்ள வேண்​டும் என்​றும் தென் மாநிலங்​களின் நாடாளு​மன்​றப் பிர​தி​நி​தித்​து​வம் பாதிக்​கப்​படக் கூடாது என்​றும் மத்​திய உள்​துறை அமைச்​சரிடம் வலி​யுறுத்​தப்​பட்​டுள்​ளது.

மேகே​தாட்டு அணை கட்​டு​வது கர்​நாடகா​வுக்​காக அல்ல; தமி​ழ​கம் மற்​றும் புதுச்​சேரி​யின் பயன்​பாட்​டுக்​காகவே கட்​டப்​பட​ உள்​ளது. மாநிலங்​களுக்​கு இடையே​யான நதிநீர்​ விவ​காரங்​கள்​ தொடர்​​பாகத்​ தனி​யாகக்​ கூட்​டம்​ கூட்​டி, சுமுக​மான முறை​யில்​ தீர்​வு​காண ஒப்​புக்​கொள்​ளப்​பட்​டுள்​ளது” என்​றார்​.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி