அரசியல் இலங்கை செய்தி

“அரசியல் லாபத்துக்காகவே கடந்த காலங்களில் வீதி அபிவிருத்தி”

  • February 11, 2026
  • 0 Comments

“கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் தமது சொந்தத் தேவைகளுக்கும், அரசியல் இலாபங்களுக்காகவுமே வீதிகளை அபிவிருத்தி செய்தனர்.” ஆனால், தற்போதைய அரசாங்கமே மக்களின் அடிப்படைத் தேவைகளை உணர்ந்து வீதிகள், பாலங்கள் மற்றும் இறங்குதுறைகளை அபிவிருத்தி செய்து வருகின்றது.” இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். ” மறுமலர்ச்சிக்கான பாதை’ திட்டத்தின் கீழ், ‘ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதி’ மேம்படுத்தல் மற்றும் நிர்மாணப் பணிகளின் ஆரம்ப நிகழ்வு, இன்று (11.02.2026) காலை அச்சுவேலி மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. […]

விளையாட்டு

England vs West Indies: இன்று பலப்பரீட்சை!

  • February 11, 2026
  • 0 Comments

ICC T-20 உலகக்கிண்ண தொடரில் இன்றும் மூன்று போட்டிகள் நடைபெறுகின்றன. 13 ஆவ லீக் ஆட்டத்தில் Afghanistan மற்றும் South Africa அணிகள் மோதுகின்றன. இந்தியாவில் நடைபெறும் இப்போட்டி அந்நாட்டு நேரப்படி முற்பகல் 11 AM மணிக்கு ஆரம்பமாகின்றது. 14 ஆவது லீக் ஆட்டத்தில் Australia , Ireland அணிகள் களம் காண்கின்றன. கொழும்பு ஆர். பிரமேதாச மைதானத்தில் இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். 15 ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் England […]

அரசியல் இலங்கை செய்தி

கிவுல் ஓயாத திட்டத்தில் உள்நோக்கம் எதுவும் கிடையாது: அரசு விளக்கம்!

  • February 11, 2026
  • 0 Comments

“கிவுல் ஓயா அபிவிருத்தி திட்டத்தை Kivul Oya project அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி வாக்குவேட்டை நடத்துவதற்கு சிலர் முற்படுகின்றனர். எனினும், அத்திட்டத்தில் எவ்வித உள்நோக்கமும் கிடையாது.” இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது கிவுல்ஓயா திட்டம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் விவசாயத்துக்குரிய நீர்பாசன […]

ஆஸ்திரேலியா

West Bank பகுதியை கட்டுப்படுத்த இஸ்ரேல் வியூகம்: ஆஸ்திரேலியா எதிர்ப்பு!

  • February 11, 2026
  • 0 Comments

மேற்குக் கரையை (West Bank) கையகப்படுத்தும் நோக்கில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக, உலக நாடுகளின் கடும் கண்டனங்கள் வெளிவந்து வரும் நிலையில், ஆஸ்திரேலியாவும் தனது தெளிவான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. பாலஸ்தீன நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இஸ்ரேலின் ஆட்சியையும் கட்டுப்பாட்டையும் விரிவுபடுத்தும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது. இதன்ஓர் அங்கமாகவே மேற்குக் கரையில் உள்ள இஸ்ரேலி குடியேற்றங்களை மேலும் விரிவுபடுத்தப்பட்டுவருகின்றது. இந்த நகர்வுகள், சுயாதீனமான மற்றும் இறையாண்மை கொண்ட ஒரு பாலஸ்தீன் […]

இலங்கை செய்தி

சந்தேக நபர் கைது: போலி துப்பாக்கியே கொண்டுவந்தார் என்பது அம்பலம்!

  • February 10, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தையில் பச்சை மிளகாய் வாங்க வந்தவர் கொண்டு வந்த துப்பாக்கி போலி துப்பாக்கி எனவும் , குறித்த நபரை தாம் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள மருதனார்மடம் சந்தைக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை துப்பாக்கியுடன் பச்சை மிளகாய் வாங்க வந்தவரால் சந்தையில் பரபரப்பு ஏற்பட்டது குறித்த நபர் தலைக்கவசம் அணிந்து , கைகளுக்கு கையுறை அணிந்தவாறு, பை ஒன்றுடன் வந்து, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் பச்சை மிளகாயை கொள்வனவு செய்து கொண்டு […]

இலங்கை செய்தி

யாழில் சந்தைக்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு!

  • February 10, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், மருதனார்மடம் பொதுச் சந்தைக்குள் நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நடமாடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:- மருதனார்மடம் சந்தைக்கு வந்த நபர் ஒருவர், தனது அடையாளத்தை மறைக்கும் வகையில் தலைக்கவசம் மற்றும் கைகளுக்குக் கையுறைகளை அணிந்திருந்துள்ளார். அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் வழமை போல் பச்சை மிளகாயைக் கொள்வனவு செய்த அவர், திடீரென “இந்தச் சந்தைக்குள் வட்டிக்குப் […]

விளையாட்டு

நியூசிலாந்து அணி சாதனை வெற்றி!

  • February 10, 2026
  • 0 Comments

ஐக்கிய அரபு அமீரக UAE அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி அதிரடியாக ஆடி வெற்றிநடை போட்டுள்ளது. T 20 உலகக்கிண்ண தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற 11-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற UAE அணியின் தலைவர் முகமது வசீம் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். அதன்படி துடுப்பெடுத்தாடிய UAEஅணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ஓட்டங்களைப் பெற்றது. பின்னர் 174 […]

இலங்கை செய்தி

யாழில் நடந்த துப்பாக்கிச்சூடு: அரசு கூறுவது என்ன?

  • February 10, 2026
  • 0 Comments

“யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa இன்று (10) தெரிவித்தார். ஊர்காவற்றுறை பொலிஸாரும், யாழ்.குற்ற விசாரணைப் பிரிவும் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றன எனவும் அவர் கூறினார். யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் இன்று அதிகாலை பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், வேனொன்றை செலுத்திச் சென்ற 17 வயதுடைய சிறுவன் உயிரிழந்தார். வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த அல்பினோ அருள் பயாஸ் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தவராவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]

இலங்கை செய்தி

பிக்குகளை விடுவிக்கக் கோரி திருமலையில் ஆர்ப்பாட்டம்!

  • February 10, 2026
  • 0 Comments

திருகோணமலை, சங்கமித்தை விகாரைக்கு முன்பாக இன்று காலை கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நான்கு பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 10 பேரையும் பிணையில் விடுதலை செய்யக் கோரியே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. திருகோணமலை ‘டச்பே’ கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கட்டுமானம் ஒன்றை அமைத்தமை மற்றும் அங்கு புத்தர் சிலையொன்றை நிறுவியமை தொடர்பாக கடந்த மாதம் 14 ஆம் திகதி மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் 4 பௌத்த பிக்குகள் மற்றும் 6 பொதுமக்கள் […]

இலங்கை செய்தி

குஜராத் முதல்வருடன் ஜே.வி.பி. செயலர் சந்திப்பு: கேரளா செல்லவும் ஏற்பாடு!

  • February 10, 2026
  • 0 Comments

ஜே.வி.பியின் JVP பொதுச்செயலாளர் டில்வின் சில்வா Tilvin Silva, இந்தியா குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர ரஜினிகாந்த் படேலுடன் Bhupendra Rajnikant Patel பேச்சு நடத்தியுள்ளார். இச்சந்திப்பு நேற்று நடைபெற்றது என ஜே.வி.பியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இந்திய கலாசார உறவுகளுக்கான சபையின் (ICCR) அழைப்பின் பிரகாரமே டில்வின் சில்வா இந்தியா சென்றுள்ளார். அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான கிட்ணன் செல்வராஜ் Kitnan Selvaraj , இளங்குரமன் Ilanguraman உள்ளிட்ட குழுவினரும் சென்றுள்ளனர். இவ்விஜயத்தின் ஓர் அங்கமாகவே குஜராத் […]