ஈரான் கப்பலுக்கு உதவியது ஏன்? இலங்கை விளக்கம்!
ஈரான் கப்பல் விபத்துக்குள்ளானமை மற்றும் அதற்கு இலங்கை வழங்கிய உதவி தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், நாடாளுமன்றத்தில் இன்று (04) விளக்கமளித்தார். இலங்கைக்குரிய கடல் எல்லைக்கு அப்பால் ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘ஐரிஸ் டெனா” என்ற கப்பல் விபத்துக்குள்ளாகி, மூழ்கின்றது என இன்று அதிகாலை 5:08 மணியளவில் கடற்படைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உடனடியாகச் செயல்பட்ட இலங்கை கடற்படை மீட்புப் படகுகளை அனுப்பி வைத்தது. கப்பலில் 180 பேர்வரை இருந்துள்ளனர். விமானப்படை மற்றும் கடற்படையின் கூட்டு […]













