ஆஸ்திரேலியா செய்தி

பாதுகாப்பு செலவீனங்களை அதிகரிக்கிறது ஆஸ்திரேலியா!

  • April 16, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கூடுதல் நிதியை பாதுகாப்புக்கு ஒதுக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இன்று (16) வெளியிடப்பட்டுள்ள ‘2026 தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தின்’ (National Defence Strategy 2026) படி, நாட்டின் பாதுகாப்புச் செலவினம் வரும் 2033 ஆம் ஆண்டிற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 3 சதவீதமாக உயர்த்தப்படவுள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில் பாதுகாப்புத்துறைக்காக கூடுதலாக 53 பில்லியன் டாலர்கள் ஒதுக்கப்படும். இதில் அடுத்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 14 பில்லியன் டாலர்கள் செலவிடப்படும். “இரண்டாம் […]

விளையாட்டு

மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் இன்று மோதல்!

  • April 16, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் இன்று (16) நடைபெறும் 24 ஆவது லீக் ஆட்டத்தில் Mumbai Indians மற்றும் Punjab Kings ஆகிய அணிகள் மோதுகின்றன. மும்பை நகரில் உள்ள வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். தொடர் ஆரம்பத்தில் சில தடுமாற்றங்களை சந்தித்த மும்பை அணி, தற்போது மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப உற்சாகத்துடன் களமிறங்குகிறது. ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை எந்த தோல்வியும் சந்திக்காமல் தொடரில் ஒரே அணியாக ஆதிக்கம் […]

அரசியல் இலங்கை செய்தி

வெடுக்குநாறிமலையும் பறிபோகுமா?

  • April 16, 2026
  • 0 Comments

“வெடுக்குநாறிமலையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சுவீகரிக்கப் போகின்றாரார்களா இல்லையா என்பது தொடர்பில் வெளிப்படையாக கூறவேண்டும்.” என இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். “வவுனியா – நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் பௌத்தர்களுக்கு உரியது என புத்தசாசன அமைச்சர் சுனில் செனவி தெரிவித்திருந்தார். எனினும் இதனை அமைச்சர் சந்திரசேகர் மறுத்திருந்தார். இது தொடர்பில் உங்களுடைய கருத்து என்ன?” என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே […]

விளையாட்டு

முதலிடத்துக்கு முன்னேறியது RCB!

  • April 16, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 23 ஆவது லீக் ஆட்டத்தில் RCB அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற Royal Challengers Bangalore (RCB) அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய Lucknow Super Giants அணி 20 ஓவர்களில் 146 ஓட்டங்களைப் பெற்றது. பின்னர் 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை RCB விரட்டியது. RCB அணி […]

உலகம் செய்தி

அமைதி பேச்சு: சவூதி இளவரசர், பாகிஸ்தான் பிரதமர் ஆலோசனை!

  • April 16, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆகியோருக்கிடையில் ஜித்தாவில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது மத்திய கிழக்கு பிராந்திய விவகாரங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளன. குறிப்பாக ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் நடைபெறும் அமைதி பேச்சு குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தானால் மேற்கொள்ளப்படும் இத்தகைய ராஜதந்திர முயற்சிகளை சவூதி இளவரசர் வரவேற்றுள்ளார்.

இலங்கை செய்தி

திருமலையில் நீரில் மூழ்கிய சகோதரர்கள் சடலங்களாக மீட்பு!

  • April 15, 2026
  • 0 Comments

நீரில் அடித்துச்செல்லப்பட்ட மூன்று சகோதரர்கள் சடலங்களாக மீடக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சோமாவதி பாலத்துக்கு அருக்கிலேயே இத்துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாலத்துக்கு கீழ் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள நீரில் மூழ்கி காணாமல் போனார்கள். சோமாவதி வீதி, சேருநுவர-ஜெமுனுபுர பகுதியைச் சேர்ந்த மூன்று சகோதரர்களே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளனர். தந்தை மற்றும் நான்கு மகன்கள் நேற்று (14) செவ்வாய்கிழமை மாலை சோமதி பாலத்திற்கு கீழ் உள்ள ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். இதன்போதே […]

உலகம் செய்தி

ஈரானில் களமிறங்கினார் பாகிஸ்தான் ராணுவ தளபதி!

  • April 15, 2026
  • 0 Comments

பாகிஸ்தானின் உயர்மட்ட தூதுக்குழுவொன்று ஈரானுக்கு அவசர பயணம் மேற்கொண்டுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் அமைதி பேச்சுகளை முன்னெடுப்பதற்கு பாகிஸ்தான் மத்தியஸ்தம் வகிக்கின்றது. இஸ்லாமாபாத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முதல் சுற்று பேச்சு தோல்வி அடைந்த நிலையில், மீண்டும் பேச்சை தொடர்வதற்குரிய முயற்சியில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது. இதன்ஓர் அங்கமாகவே பாகிஸ்தானைச் சேர்ந்த உயர்மட்டக் குழுவினர் ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு சென்றுள்ளது. அமெரிக்காவிடமிருந்து பெறப்பட்ட முக்கியமான செய்தியைப் பகிரவும், தோல்வியடைந்த முந்தைய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட ஆலோசனைகளை மேற்கொள்ளவும் […]

உலகம் செய்தி

யுரேனியம் செறிவூட்டும் உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது: ஈரான் திட்டவட்டம்!

  • April 15, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்த போதிலும், பாகிஸ்தானை மத்தியஸ்தராகக் கொண்டு இரு நாடுகளும் தொடர்ந்து கருத்துக்களைப் பரிமாற்றிவருகின்றன. ஈரான் தரப்பில் இருந்தும் மேற்படி தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல ஈரானின் அணுசக்தித் திட்டமானது முற்றிலும் அமைதி வழியிலானது என ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார். அணு ஆயுதக் கட்டுப்பாடுகள் குறித்து விவாதிக்க ஈரான் தயாராக இருந்தாலும் தனது உள்நாட்டுத் தேவைக்கேற்ப யுரேனியம் செறிவூட்டும் உரிமையை விட்டுக்கொடுக்காது எனவும் அவர் கூறியுள்ளார். இது […]

செய்தி

‘ஈரானுக்கு ஆயுதம் வழங்காதீர்’: தனது கோரிக்கையை சீனா ஏற்றதாக ட்ரம்ப் தகவல்!

  • April 15, 2026
  • 0 Comments

ஈரானுக்கு ஆயுதங்களை வழங்க வேண்டாம் என்ற தனது கோரிக்கையை சீனா ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump தெரிவித்துள்ளார். ஹார்முஸ் நீரிணையை நிரந்தரமாகத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது உலக நாடுகளுக்கும் சீனாவுக்கும் நன்மை பயக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். அமெரிக்கா அமைதியான வழிமுறையை விரும்புவதாகவும், தேவைப்பட்டால் போரிடத் தயார் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார். அதேவேளை, ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது. ஈரானுக்கு புதிய வான் பாதுகாப்பு […]

உலகம் செய்தி

அழுத்தங்களுக்கு பணிந்து போரில் பங்கேற்கோம்: பிரிட்டன் திட்டவட்டம்!

  • April 15, 2026
  • 0 Comments

ஈரான்மீதான போரில் பிரிட்டன் இணைய வேண்டும் என்ற அழுத்தங்களுக்கு தாம் அடிபணியப்போவதில்லை என பிரதமர் Keir Starmer திட்டவட்டமாகத் தெரிவித்தார். அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கிடையிலான வர்த்தக ஒப்பந்தம் எந்நேரத்தில் வேண்டுமானாலும் மாற்றப்படலாம் என டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ள பின்னணியிலேயே பிரிட்டன் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார். போரில் இணைவது தங்களது தேசிய நலனுக்கு எதிரானது என்றும் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் Keir Starmer குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டுத் தலைவர்களின் கருத்துக்கள் அல்லது அரசியல் நெருக்கடிகளுக்கு அடிபணிந்து நாட்டின் வெளியுறவுக் கொள்கையை […]