ஜபோரிஜியாவில் ரஷ்யா தீவிர தாக்குதல் – 07 பேர் உயிரிழப்பு
உக்ரைனின் ஜபோரிஜியா (Zaporizhzhia) நகரில் ரஷ்யா இன்று காலை நடத்திய தாக்குதலில் குறைந்தது 07 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும், அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இந்த தாக்குதலில் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.



