இலங்கைக்கான கொரிய தூதுவர் Miyon Lee, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை மரியாதை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இலங்கை செய்தி

இலங்கையுடன் பாதுகாப்பு உறவை வலுப்படுத்துகிறது கொரியா

  • July 2, 2026
  • 0 Comments

இலங்கைக்கான கொரிய தூதுவர் Miyon Lee, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை மரியாதை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். பாதுகாப்பு அமைச்சில் மரியாதை நிமித்தம் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, இலங்கைக்கும் கொரியக் குடியரசிற்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பரஸ்பர அக்கறை கொண்ட விடயங்கள் குறித்து சுமுகமான கலந்துரையாடல் இடம்பெற்றது. மேலும் பாதுகாப்பு ஒத்துழைப்பு, இராணுவப் பயிற்சி மற்றும் பரிமாற்றத் திட்டங்கள், திறன் மேம்பாடு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை ஆகிய […]

எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. செய்தி பொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ குறித்து மகிழ்ச்சியான செய்தி…

  • July 2, 2026
  • 0 Comments

தமிழக முதல்வர் தளபதி விஜயின் கடைசி படமாகக் கருதப்படும் ஜனநாயகன் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய மாத நடுப்பகுதியில் படம் திரைக்கு வரும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் இழுபறி நீடித்தது. இந்நிலையில் ‘ஜனநாயகன்’ படம் ஆன்லைனில் கசிந்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்த சர்ச்சை வரும்காலப்பகுதியில் விஜய் தீவிர […]

Youri Tielemans scores an incredibly late and controversial penalty winner for Belgium! Photograph: Agustín Marcarian செய்தி விளையாட்டு

கைவசம் இருந்த வெற்றி தாரைவார்ப்பு – வெளியேறியது செனகல்

  • July 2, 2026
  • 0 Comments

சீட்டிலில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி 32 (last-32) சுற்று ஆட்டத்தில் பெல்ஜியம் அணி, கூடுதல் நேரத்தில் யூரி திலெமான்ஸ் (Youri Tielemans) அடித்த பெனால்டி கோல் மூலம் 3-2 என்ற கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றது. புதன்கிழமையன்று நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் செனகல் அணியின் Habib Diarra மற்றும் Ismaila Sarr ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து தங்கள் அணிக்கு 2-0 என்ற தகுதியான முன்னிலையைப் பெற்றுத் தந்தனர். அவர்கள் […]

ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் குடியிருப்பு கட்டிடங்களைத் தாக்கியதுடன், மத்திய பவுல்வார்டில் உள்ள ஒரு ஹோட்டலில் தீ விபத்தையும் ஏற்படுத்தின. ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

ரஷ்ய தாக்குதலில் எட்டு பேர் பலி – அவசரமாக நாடு திரும்பிய உக்ரைன் ஜனாதிபதி

  • July 2, 2026
  • 0 Comments

ரஷ்யப் படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்மீது ஒரே இரவில் நடத்திய தாக்குதலில் குறைந்தது எட்டு பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் குடியிருப்பு கட்டிடங்களைத் தாக்கியதுடன், மத்திய பவுல்வார்டில் உள்ள ஒரு ஹோட்டலில் தீ விபத்தையும் ஏற்படுத்தின. ஐரோப்பிய ஒன்றியத்தின் சுழற்சி முறையிலான தலைமைப் பொறுப்பை அயர்லாந்து ஏற்கும் ஆறு மாத காலத் தொடக்கத்திற்காக டப்ளின் சென்றிருந்த உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஒரே இரவில் தாக்குதல் நடத்தப்படலாம் என முன்னரே எச்சரித்திருந்தார். […]

இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளது. இந்தியா செய்தி

ஜப்பான், இந்தியா உறவை வலுப்படுத்த வியூகம்

  • July 2, 2026
  • 0 Comments

ஜப்பான் பிரதமர் சனாயே தகைச்சி (Sanae Takaichi) தனது முதலாவது அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள நிலையில், பிரதமர் மோடியை இன்று (02) சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளது. ஜப்பானின் முதல் பெண் பிரதமரான தகைச்சி, தற்போது இந்தியாவுக்கான தனது கன்னிப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். மூன்று நாள் பயணமாக அவர் புதன்கிழமை டெல்லி வந்தடைந்தார். இதுகுறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள […]

ஜுன் மாதத்தில் மாத்திரம் 21 ஆயிரத்து 556 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

இலங்கையில் டெங்கு நோய் தீவிரம்: 55 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு

  • July 2, 2026
  • 0 Comments

இலங்கையில் நோய் தீவிரமடைந்துவரும் நிலையில், அதனை ஒடுக்குவதற்குரிய டெங்கு ஒழிப்பு சமரை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது. இவ்வருடம் ஜனவரி முதல் ஜுலை 01 வரையான காலப்பகுதிக்குள் 56 ஆயிரத்து 422 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஜுன் மாதத்தில் மாத்திரம் 21 ஆயிரத்து 556 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு நோயினால் இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர். நாட்டில் 14 மாவட்டங்களில் டெங்கு பரவும் அபாயம் இருந்தாலும் மேல் […]

இங்கிலாந்தின் நட்சத்திரக் கேப்டன் ஹாரி கேனின் அதிரடியால், பதிலடி கொடுத்து வெற்றிநடை போட்டு, அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது இங்கிலாந்து. செய்தி விளையாட்டு

கடைசி நொடியில் அதிரடி காட்டி வென்றது இங்கிலாந்து

  • July 2, 2026
  • 0 Comments

அட்லாண்டாவில் (Atlanta) நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், காங்கோ ஜனநாயகக் குடியரசுக்கு (DR Congo) எதிரான ஆட்டத்தில், ஹாரி கேன் கடைசி நேரத்தில் அடித்த இரண்டு அபார கோல்களால் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றுள்ளது. கடைசி நேரத்தில் அடிக்கப்பட்ட இரு கோல்களே இங்கிலாந்தை அதிர்ச்சி தோல்வியிலிருந்து காப்பாற்றியது. முக்கிய சர்வதேச தொடர் ஒன்றில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் 60 ஆண்டுகால ஏக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் களம் இறங்கியுள்ள தாமஸ் துஷெலின் தலைமையிலான […]

எதிர்வரும் ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வெப்பநிலை இயல்பை விட 2.8 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது இலங்கை செய்தி

‘எல்நினோ தாக்கம்: வடக்கு, கிழக்கில் வரலாறுகாணாத வெப்பம்’

  • July 1, 2026
  • 0 Comments

“எதிர்வரும் ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வெப்பநிலை இயல்பை விட 2.8 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.” இவ்வாறு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதியும் வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- “தற்போது பசுபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள எல்நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கம் பரவலாக உணரப்பட்டு வருகின்றது. இதன்படி, எதிர்வரும் ஜூலை மாதப் பிற்பகுதியில் இலங்கையைச் சூழவுள்ள இந்து […]

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்நிறுத்தச் சூழலில் நிலவும் நிச்சயமற்ற தன்மையால், வான்வழிப் போக்குவரத்துப் பாதைகளில் திடீர் பதற்றம் ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஐரோப்பா செய்தி

மத்திய கிழக்கு வான்வெளி குறித்து எச்சரிக்கை

  • July 1, 2026
  • 0 Comments

ஈராக் மற்றும் லெபனான் வான்வெளியைப் பயன்படுத்துவது ஆபத்தானது என ஐரோப்பிய ஒன்றிய விமான பாதுகாப்பு முகமை (EASA) மீண்டும் எச்சரித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்நிறுத்தச் சூழலில் நிலவும் நிச்சயமற்ற தன்மையால், வான்வழிப் போக்குவரத்துப் பாதைகளில் திடீர் பதற்றம் ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதன் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளுக்கு மேல் பறக்கும் வணிக ரீதியான விமானங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் இருந்த இந்த பாதுகாப்பு ஆலோசனையை, வரும் ஜூலை 8-ஆம் […]

ஈழத்தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த அருண் ராஜ்குமார், மெர்சிடிஸ் அணியின் 'ட்ராக்சைட் பவர் யூனிட்' (Trackside Power Unit) பொறியியலாளராகப் பணியாற்றுகிறார். செய்தி விளையாட்டு

பார்முலா 1 வரலாற்றில் புதிய அத்தியாயம்: உலகமே வியந்து பார்த்த ஈழத்தமிழர் அருண் ராஜ்குமார்

  • July 1, 2026
  • 0 Comments

Austrian Grand Prix கார் பந்தய வெற்றிக் கொண்டாட்டத்தின் போது, Mercedes அணியின் சார்பில் மேடைக்குச் சென்று, தயாரிப்பாளர்களுக்கான (Constructors’) வெற்றிக் கிண்ணத்தை ஏந்திய பிரித்தானிய தமிழ் பொறியியலாளரான அருண் ராஜ்குமார் , உலகளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஈழத்தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த அருண் ராஜ்குமார், மெர்சிடிஸ் அணியின் ‘ட்ராக்சைட் பவர் யூனிட்’ (Trackside Power Unit) பொறியியலாளராகப் பணியாற்றுகிறார். மெர்சிடிஸ் மற்றும் அதன் வாடிக்கையாளர் அணிகளுக்கான பார்முலா 1 எஞ்சின்களை வடிவமைத்தல், தயாரித்தல் மற்றும் சோதிக்கும் […]