ஐரோப்பா செய்தி

வறட்சியால் திணறும் Greek தீவு

கிரீஸின் வட மற்றும் மேற்குப் பகுதிகளில் பெய்த மழையினால் அந்நாடு 2022 ஆம் ஆண்டிற்குப் பிறகு மிக அதிகளவிலான ஈரப்பதமான குளிர்காலத்தை எதிர்கொண்ட போதிலும், ஏஜியன் கடலின் (Aegean Sea) தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பட்டாம்பூச்சி வடிவ அஸ்திபாலா (Astypalaia) தீவு எந்தப் பயனையும் பெறவில்லை.

கிரீஸின் வட மற்றும் மேற்குப் பகுதிகளில் பெய்த மழையினால் அந்நாடு 2022 ஆம் ஆண்டிற்குப் பிறகு மிக அதிகளவிலான ஈரப்பதமான குளிர்காலத்தை எதிர்கொண்ட போதிலும், ஏஜியன் கடலின் (Aegean Sea) தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பட்டாம்பூச்சி வடிவ அஸ்திபாலா (Astypalaia) தீவு எந்தப் பயனையும் பெறவில்லை.

குடிநீருக்காக முழுமையாக பாட்டில் தண்ணீரை நம்பியிருக்கும் இத்தீவு, 2020 ஆம் ஆண்டிற்குப் பிறகு தனது இரண்டாவது மிக மோசமான வறண்ட காலநிலையை எதிர்கொண்டுள்ளது.

இத்தீவில் 1990களின் பாதியில் கட்டப்பட்ட ஒரேயொரு மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரி (நீர் தேக்கம்) மட்டுமே குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்கான முதன்மை ஆதாரமாக உள்ளது.

தற்போது இந்த ஏரியின் நீர்மட்டம் அதன் மொத்த கொள்ளளவில் ஆறில் ஒரு பங்காக (1,50,000 கன மீட்டர்) குறைந்துள்ளது. கோடைகாலத்தில் இங்கு தினசரி நுகர்வு 900 கன மீட்டராக உள்ளதால், இந்த நீர் இன்னும் ஐந்துரை மாதங்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும்.

இதன் காரணமாக, ஏரியின் நீர் இருப்பைப் பாதுகாக்கும் நோக்கில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் விவசாயிகளுக்கான நீர் விநியோகத்தை அதிகாரிகள் துண்டித்துள்ளனர்.

இதனால் லிவாடி (Livadi) கடலோரக் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்கள் காய்ந்து போயுள்ளதுடன், கிணற்று உவர்நீரை நம்பி விவசாயம் செய்ய வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

அஸ்திபாலா தீவின் நிரந்தர மக்கள் தொகை 1,400 மட்டுமே. ஆனால், கோடைகாலத்தின் உச்சத்தில் இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையால் மக்கள் தொகை 7,000 ஆக உயர்கிறது.

இந்த திடீர் மக்கள் தொகை பெருக்கத்தினால் நிலவும் கடுமையான நீர் தேவையை அங்குள்ள தற்போதைய கடல்நீர் சுத்திகரிப்பு (Desalination) நிலையங்களால் ஈடுசெய்ய முடியாமல் போயுள்ளது.

இதனை எதிர்கொள்ள தீவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, தற்காலிக கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. எனினும், இவை அதிக செலவு மிக்கவை மற்றும் அதிக ஆற்றல் நுகரக்கூடியவை என அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

நீர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க இத்தீவில் உள்ள சில ஹோட்டல் உரிமையாளர்கள் புதிய உத்திகளைக் கையாண்டு வருகின்றனர்.

காலிபோர்னியா அல்கலாய் (Carolina Alkalai) என்ற ஹோட்டல் உரிமையாளர், தங்களது அறைகளைத் தினசரி சுத்தம் செய்வதைத் தவிர்க்கும் வாடிக்கையாளர்களுக்கு 5 யூரோ மதிப்புள்ள வவுச்சர்களை (Vouchers) வழங்குகிறார்.

மேலும், எதிர்காலத்தில் நீச்சல் குளங்களுக்குப் பதிலாக மழைநீரைச் சேமிக்கும் தொட்டிகளுடன் கூடிய ஹோட்டல்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உலகளாவிய வெப்பநிலை உயர்வு காரணமாக, வரும் 2049 ஆம் ஆண்டளவில் இந்தத் தீவுகளில் வறட்சி மற்றும் நீர் பற்றாக்குறை இன்னும் மோசமடையக்கூடும் என ஏதென்ஸை தளமாகக் கொண்ட “டெமோக்ரிட்டோஸ்” (Demokritos) தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி