உலகம்

நியூசிலாந்தில் வலுவான நிலநடுக்கம் பதிவு – கட்டிடங்கள் குழுங்கியதால் பரபரப்பு

நியூசிலாந்தின் தெற்குத் தீவில் உள்ள டீ அனாவு ( Te Anau) பகுதியில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று பதிவாகியுள்ளது.

குறித்த நில அதிர்வை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அப்பகுதியில் இருந்த கட்டிடங்கள் குழுங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கமானது ஃபியர்ட்லாண்டிற்கான நுழைவாயிலாக விளங்கும் டீ அனாவுவிலிருந்து சுமார் 40 கி.மீ (25 மைல்கள்) வடக்கே மையம் கொண்டிருந்ததாக நியூசிலாந்தின் தேசிய அவசரகால மேலாண்மை முகமை தகவல் வெளியிட்டுள்ளது.

தற்போது சுனாமி எச்சரிக்கை இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், கடலோரப் பகுதிகளில் “வலுவான மற்றும் அசாதாரணமான நீரோட்டங்கள் மற்றும் கணிக்க முடியாத அலை எழுச்சிகள்” ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்