அறிவியல் & தொழில்நுட்பம்

பொலிஸ் அவசர சேவைக்கு வரும் தேவையற்ற அழைப்புகளை கட்டுப்படுத்த உதவும் AI

பிரித்தானியாவின் பொலிஸ் அவசர சேவைக்கு வரும் தேவையற்ற அழைப்புகளை கட்டுப்படுத்த அல்லது துண்டிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது.

ஆண்டுதோறும் பெறப்படும் 20 மில்லியன் அழைப்புகளில் சுமார் 20 சதவீதம், உள்ளாட்சி மன்றங்கள் போன்ற காவல்துறை அல்லாத அமைப்புகளுக்கு உரியவை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த புதிய செயற்கை நுண்ணறிவு அமைப்பு, அழைப்பிற்கான காரணத்தைக் கண்டறிந்து, அழைப்பாளர் வரிசையில் நுழைவதற்கு முன்பே, காவல்துறை அல்லாத விசாரணைகளைத் தானாகவே திசை திருப்பிவிடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தொழில்நுட்பம் காவல்துறைக்கு ஆண்டுதோறும் £8.5 மில்லியன் வரை சேமிக்கும் என்றும், அந்த நிதி  தெருக் குற்றங்களைக் கையாள்வதில் முதலீடு செய்யப்படும் எனவும் உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை உண்மையான காவல்துறை உதவி தேவைப்படும் அழைப்பாளர்கள் திசை திருப்பப்படுவதைத் தடுக்க வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

VD

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்