இலங்கை

சாரதிகளுக்கு எச்சரிக்கை!

மதுபோதையில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராகச் சட்டத்தை மிகக் கடுமையான முறையில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்துப் பாவனை மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் W.P.G.சேனாதீர தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள காவல்துறை தலைமையகத்தில் நேற்று (8) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், பண்டிகைக் காலத்தில் ஒரு சிறிய வாகன விபத்து இடம்பெற்றாலும் கூட, அதில் சம்பந்தப்பட்ட சாரதிகள் உடனடியாகப் போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

பண்டிகைக் காலங்களில் வீதிகளில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கவும், உயிரிழப்புகளைத் தவிர்க்கவும் பொலிஸார் விசேட கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் W.P.G.சேனாதீர குறிப்பிட்டுள்ளார்.

Mahi

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்