உலகம்

மத்தியக்கிழக்கில் நிரந்தர அமைதி எப்போது நிலவும்? விரைவில் தீர்மானம்!

  • May 30, 2026
  • 0 Comments

ஈரானுடனான போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான முன்மொழியப்பட்ட ஒப்பந்தம் குறித்து விரைவில் தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று தெரிவித்துள்ளார். ட்ரம்பின் கொள்கைகளுக்கும், அமெரிக்காவின் நலன்களுக்கும் சாதகமான ஒரு முடிவையே ட்ரம்ப் எடுப்பார் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் ஏற்பட்ட போர் நிறுத்தம் 60 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் போர் நிறுத்தத்திற்கு ஏதுவான ஒரு ஒப்பந்தத்தை எட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இவ்விரு […]

இலங்கை செய்தி

அமைதிக்கான நடைப்பயணம் நிறைவு

  • April 28, 2026
  • 0 Comments

அமைதிக்கான நடைப்பயணம் நிறைவு விழாவில், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க  ஜய ஸ்ரீ மகா போதி மரக்கன்றை உத்தியோகபூர்வமாக வழங்கினார். வன்முறையற்ற சூழல், கருணை, மற்றும் மக்களிடையே நல்லிணக்கத்தை வளர்ப்பதை நோக்கமாகக்  கொண்டு இந்த நடைப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பாத யாத்திரை கடந்த ஏப்ரல் 21 அன்று அனுராதபுரத்தில் ஆரம்பமாகி, தம்புள்ளை,  மாத்தளை, கண்டி, கேகாலை, யக்கலை மற்றும் களனி ஆகிய நகரங்கள் வழியாக சுமார் 07 நாட்கள் பயணித்து கொழும்பு சுதந்திர சதுக்கத்தை இன்று […]

உலகம் செய்தி

லெபனானின் ஸ்திரத்தன்மை பிராந்தியத்திற்கு அவசியம் – ஜனாதிபதி அவுன் எச்சரிக்கை

  • April 24, 2026
  • 0 Comments

சைப்ரஸில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கலந்து கொண்ட உச்சிமாநாட்டில் உரையாற்றிய லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுன், தனது நாட்டின் ஸ்திரத்தன்மை பரந்த பிராந்தியத்திற்கும் முக்கியமானது என வலியுறுத்தினார். “லெபனானின் ஸ்திரத்தன்மை, முழு பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கே அடிப்படையாகும். எந்தவொரு ஸ்திரத்தன்மையின்மையும் அதன் எல்லைகளுக்குள் மட்டுமே தங்காது. அண்டை நாடுகள் மற்றும் நட்பு நாடுகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்தார். மேலும், முதலீடு மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பின் மூலம் ஐரோப்பிய கூட்டாளிகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, நெருக்கடி நிலைமையிலிருந்து […]

உலகம் செய்தி

இஸ்ரேல், லெபனான் இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி ஒப்பந்தம் ?

  • April 24, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி ஏற்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு,  தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் மோதல் தொடர்பாக வெளியிடப்பட்ட காணொளிப் பதிவில் அவர் இதனைக் கூறியுள்ளார். ஆனால், இந்த முயற்சிகளை ஹிஸ்புல்லா சீர்குலைக்க முயற்சிப்பது தெளிவாக இருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். இந்நிலையில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) மற்றும் ஹிஸ்புல்லா இரண்டும், போர் நிறுத்த ஒப்பந்த மீறல்களுக்கு ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றன. […]