அணுசக்தி விவகாரம் – அமெரிக்காவின் வெகுமதி அறிவிப்பிற்கு ஈரான் கண்டனம்
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு 20 மில்லியன் டொலர் வெகுமதி வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், இதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை “வெறுக்கத்தக்கதும் வருந்தத்தக்கதும்” என்று குறிப்பிட்டது. அமெரிக்காவின் இந்த செயலை கண்டிக்குமாறு, ஐக்கிய நாடுகளின் அணுசக்தி முகமையையும் பாதுகாப்புக் குழுவையும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி வலியுறுத்தியுள்ளார். தனது அணுசக்தித் திட்டம் அமைதியானது என்ற ஈரானின் வலியுறுத்தலை அப்பாஸ் அராக்சி மீளவும் உறுதிப்பட தெரிவித்தார். […]



