உலகம் செய்தி

பாகிஸ்தானில் மீண்டும் போர் நிறுத்த பேச்சுவார்த்தை – பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

  • April 21, 2026
  • 0 Comments

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடர்பான நிச்சயமற்ற நிலை தொடர்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், பேச்சுவார்த்தைகள் நடைபெறக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் இஸ்லாமாபாத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நகரின் முக்கிய வீதிகளில் இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைகள் எனும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, அரசாங்கத்தின் தயார்நிலை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுடன் தொடர்புகளை வைத்திருக்கும் பாகிஸ்தான், இந்த சூழலில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அதேவேளை, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றமான சூழ்நிலைகளில் பாகிஸ்தான் […]

இலங்கை செய்தி

நாட்டில் மருந்துப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் – அவசர நடவடிக்கை எடுக்குமாறு அழைப்பு

  • April 21, 2026
  • 0 Comments

நாட்டின் மருந்து விநியோகச் சங்கிலியில் அதிகரித்து வரும் அழுத்தம் காரணமாக, அத்தியாவசிய மற்றும் உயிர் காக்கும் மருந்துகளைத் தடையின்றி அணுகுவதை உறுதி செய்யும் நாட்டின் திறன் பாதிக்கப்படக்கூடும் என இலங்கை மருந்துத் தொழில்துறை சம்மேளனம் (SLCPI) எச்சரித்துள்ளது. இந்த மருந்துப் பற்றாக்குறை நெருக்கடியைத் தடுப்பதற்கு அரசாங்கம் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது. உடனடி மற்றும் நடைமுறை நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், தனியார் மற்றும் பொது சுகாதாரத் துறைகளில் அதிகரித்து வரும் தட்டுப்பாட்டை இலங்கை […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் வேலையின்மையில் எதிர்பாராத சரிவு – வேலை சந்தையில் புதிய மாற்றம்

  • April 21, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் வேலையின்மை விகிதம் எதிர்பாராத வகையில் குறைந்துள்ளது என தேசிய புள்ளிவிபரவியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. பெப்ரவரி வரையிலான மூன்று மாதங்களில் வேலையின்மை 4.9% ஆகக் குறைந்துள்ளது. இது முன்னதாக 5.2% ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அதேவேளை, வேலை தேடாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் மொத்த வேலைவாய்ப்பு கணக்கில் இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக மாணவர்கள் படிப்புடன் வேலை தேடுவதை குறைத்திருப்பதும் ஒரு காரணமாகும். இந்த காலகட்டத்தில் ஊதிய உயர்வு 3.6% ஆக இருந்துள்ளது. இது சமீப […]

உலகம் செய்தி

ஈரானை சூழும் பொருளாதார பேரிடி – சிக்கனத்தை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தல்

  • April 21, 2026
  • 0 Comments

ஈரானில் பொருளாதார நிலை மேலும் மோசமடையக்கூடும் என்ற அச்சத்தில், இஸ்லாமியக் குடியரசின் பாதுகாப்புப் படையினர் உட்பட பலர் மக்கள் சிக்கனத்தை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் பதற்றம் தொடர்ந்தால், அரசாங்கம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிரமம் ஏற்படுமா? பேச்சுவார்த்தைகளை நிறுத்தும் நிலையை ஈரான் தாங்குமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. போருக்கு முன்பே பொருளாதார தடைகள், பணவீக்கம் மற்றும் நாணய மதிப்பிழப்பு காரணமாக மக்கள் கடுமையான நெருக்கடியில் இருந்தனர். அத்தியாவசிய தேவைகளுக்கே பெரும்பாலான குடும்பங்கள் செலவிடும் […]

செய்தி தமிழ்நாடு

தமிழகத்தில் அமைதி கால கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு

  • April 21, 2026
  • 0 Comments

தமிழகத்தில் வாக்​குப்​ப​திவு நாளான 23 ஆம் திகதி மாலை 6 மணி வரையி​லான 48 மணி நேர அமைதி கால கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தன. தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் பிரச்​சா​ரம் இன்று மாலை 6 மணி​யுடன் நிறைவடைந்தது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இன்று மாலையுடன் தங்கள் பிரச்சாரத்தை நிறைவு செய்தனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் ஓய்ந்த நிலையில், இன்று காலை முதல் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள சோழிங்கநல்லூர், வேளச்சேரி, […]

ஐரோப்பா செய்தி

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் 100 அவது பிறந்த நாள் – மன்னர் வெளியிட்ட காணொளி

  • April 21, 2026
  • 0 Comments

மறைந்த தனது தாயான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் 100 அவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது பொதுச் சேவை வாழ்க்கையை நினைவுகூரும் வகையில் மன்னர் சார்லஸ் விசேட காணொளிச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார். உலகின் தற்போதைய நிலையைத் தனது தாய் நிச்சயம் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார் என்றும் மன்னர் எச்சரித்தார். நாம் இப்போது வாழும் இந்தக் காலகட்டத்தைப் பற்றிய பல விடயங்கள் அவரை மிகவும் கவலையடையச் செய்திருக்கக்கூடும் என்றும் தான்சந்தேகிக்கிப்பதாகவும் மன்னர் கவலை வெளியிட்டுள்ளார். ஆனால் மன்னர் உள்நாட்டு அல்லது […]

ஐரோப்பா செய்தி

மண்டேல்சன் தொடர்பான பாதுகாப்பு விவகாரம் – Robbins நாளை சாட்சியம்

  • April 20, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் முன்னாள் வெளியுறவு அலுவலக நிரந்தர துணைச் செயலாளர் ஆலி ராபின்ஸ் (Olly Robbins), வெளியுறவு விவகாரக் குழுவின் முன் நாளை காலை சாட்சியம் அளிக்கவுள்ளார். 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அந்தப் பதவியில் இருந்த அவர், கடந்த வாரம் பதவி விலகினார். பீட்டர் மண்டேல்சன் தொடர்பான பாதுகாப்பு விவகாரம் குறித்து சரியான தகவல் பிரதமருக்கு தெரிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்குப் பிறகே இந்த பதவி விலகல் இடம்பெற்றது. பிரதமர் ஸ்டார்மர் மற்றும் வெளியுறவுச் செயலாளர் […]

ஐரோப்பா செய்தி

மண்டேல்சன் விவகாரம் தேசிய பாதுகாப்புப் பிரச்சினை – எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

  • April 20, 2026
  • 0 Comments

லோர்ட் மண்டேல்சன் தொடர்பான விவகாரம் “தேசிய பாதுகாப்புப் பிரச்சினை” என எதிர்க்கட்சித் தலைவர் Kemi Badenoch, குற்றம் சுமத்தியுள்ளார். பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதப்பட்ட ஒருவர் முக்கிய தூதுவர் பதவிக்கு நியமிக்கப்பட்டதாக அவர் விமர்சித்தார். இதனால் முக்கியமான தகவல்கள் மற்றும் உளவுத்துறை விபரங்கள் அந்த நபரிடம் சென்றிருக்கலாம் என்றும் அவர் எச்சரித்தார். மேலும், இந்த விவகாரத்தில் பிரதமர் Starmer பொறுப்பேற்காமல், உள்ளார் என்றும் Kemi Badenoch குற்றம் சாட்டினார். பிரதமர் பதவி விலக வேண்டும் என தான் வலியுறுத்தியதாக […]

உலகம் செய்தி

அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தையில் குழப்பம் – நேரம் கேள்விக்குறி

  • April 20, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் திங்கட்கிழமை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவை எப்போது நடைபெறும் என்பது குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகியதால், பேச்சுவார்த்தையின் நேரம் தற்போது தெளிவற்றதாகியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் நடந்த முதல் சுற்றுப் பேச்சுவார்த்தைகளைப் போன்றே, அமெரிக்கக் குழுவை துணை ஜனாதிபதி JD Vance தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இஸ்லாமாபாத் செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், ஈரான் தரப்பிலிருந்து முரண்பட்ட சிக்னல்கள் […]

இந்தியா செய்தி

ஜம்மு காஷ்மீரில் பெரும் சோகம் – 22 பேர் உயிரிழப்பு

  • April 20, 2026
  • 0 Comments

இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் இன்று பயணிகள் பேருந்தொன்று வீதியிலிருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 22 பேர் உயிரிழந்தனர். இதன்போது 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. ராம்நகரிலிருந்து உதம்பூரை நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து, காலை சுமார் 10 மணியளவில், வளைவு ஒன்றில் திருப்பும்போது கட்டுப்பாட்டை இழந்து, மலையோரப் பள்ளத்தாக்கில் வீழ்ந்தது. இந்த விபத்தைத் தொடர்ந்து, இராணுவம், பொலிஸ் மற்றும் […]