ஐரோப்பா செய்தி

மண்டேல்சன் தொடர்பான பாதுகாப்பு விவகாரம் – Robbins நாளை சாட்சியம்

பிரித்தானியாவின் முன்னாள் வெளியுறவு அலுவலக நிரந்தர துணைச் செயலாளர் ஆலி ராபின்ஸ் (Olly Robbins), வெளியுறவு விவகாரக் குழுவின் முன் நாளை காலை சாட்சியம் அளிக்கவுள்ளார்.

2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அந்தப் பதவியில் இருந்த அவர், கடந்த வாரம் பதவி விலகினார்.

பீட்டர் மண்டேல்சன் தொடர்பான பாதுகாப்பு விவகாரம் குறித்து சரியான தகவல் பிரதமருக்கு தெரிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்குப் பிறகே இந்த பதவி விலகல் இடம்பெற்றது.

பிரதமர் ஸ்டார்மர் மற்றும் வெளியுறவுச் செயலாளர் யெவெட் கூப்பர் ஆகியோர் நம்பிக்கையை இழந்ததால், ரொபின்ஸ் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதனிடையெ, தனது பதவி நீக்கத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அவர் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!