உலகம் செய்தி

தெற்கு லெபனானில் இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் காயம்

  • May 16, 2026
  • 0 Comments

தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய பீரங்கித் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் காயமடைந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. லெபனானின் தேசிய செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, சர்பின் சந்திப்பு பகுதியை சுற்றியுள்ள இடங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலின் காரணமாக ஏற்பட்ட சேதம் மற்றும் நிலைமை குறித்து கூடுதல் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

ஐரோப்பா செய்தி

பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் – வெஸ் ஸ்ட்ரீட்டிங்

  • May 16, 2026
  • 0 Comments

பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என முன்னாள் சுகாதாரச் செயலாளர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் தெரிவித்துள்ளார். தொழிற்கட்சி ஆதரவு அமைப்பான ‘புரோகிரெஸ்’ மாநாட்டில் பேசிய அவர், “ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய சிறப்பு உறவு தேவை. பிரிட்டனின் எதிர்காலம் ஐரோப்பாவுடன்தான் உள்ளது. ஒருநாள் மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவோம்” என்று கூறினார். தொழிற்கட்சித் தலைமைப் பதவிக்கான சாத்தியமான வேட்பாளராக பார்க்கப்படும் ஸ்ட்ரீட்டிங், பிரெக்ஸிட்டை “பேரழிவான தவறு” என விமர்சித்தார். “2026ஆம் ஆண்டில் இந்த அபாயகரமான உலக சூழலில், […]

செய்தி தமிழ்நாடு

செங்கோட்டையனுக்கு நிதியமைச்சுப் பதவி – முதல்வரால், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

  • May 16, 2026
  • 0 Comments

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அமைச்சர் செங்கோட்டையனுக்கு நிதித் துறையும், ஆதவ் அர்ஜுனாவுக்கு பொதுப்பணித் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் விஜய் மற்றும் 09 அமைச்சர்கள் கடந்த 10vஆம் திகதி பதவியேற்ற நிலையில், அவர்களுக்கான இலாகாக்கள் இன்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, முதல்வர் விஜய்யின் வசம் பொது நிர்வாகம், உள்துறை, மகளிர் நலன், இளைஞர் நலன், காவல் உள்ளிட்ட துறைகள் உள்ளன. மேலும், இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, இந்திய […]

உலகம் செய்தி

தடைகள் மற்றும் போர் அழுத்தத்தில் தத்தளிக்கும் ஈரான் பொருளாதாரம்

  • May 16, 2026
  • 0 Comments

பல தசாப்தங்களாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள சர்வதேச தடைகளால் ஈரான் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. தற்போது நடைபெற்று வரும் போர் சூழ்நிலை, அந்த நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. ஈரானின் புள்ளிவிபரவியல் மையம் வெளியிட்ட தகவலின்படி, நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கம் 53.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. புள்ளிக்கு புள்ளி பணவீக்கம் 17.3 சதவீதமாக பதிவாகியுள்ளது. குறிப்பாக சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை 375 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ஈரானிய நாணயத்தின் […]

உலகம் செய்தி

ஈரான் போர் விவகாரத்தில் உடன்பாடு இன்றி முடிந்த பிரிக்ஸ் மாநாடு

  • May 16, 2026
  • 0 Comments

பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் இரண்டு நாள் மாநாடு இந்தியாவின் புதுடில்லியில் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. ஆனால், ஈரான் தொடர்பான போர் விவகாரத்தில் உறுப்புநாடுகள் ஒருமித்த முடிவை எட்டவில்லை. மாநாட்டின் இறுதி அறிக்கையில், உறுப்புநாடுகளுக்கு இடையில் “கருத்து வேறுபாடுகள்” தொடர்வதாக மட்டும் குறிப்பிடப்பட்டது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்பான மோதல் குறித்து தெளிவான ஒருமித்த நிலைப்பாடு எடுக்க முடியாத இரண்டாவது தொடர்ச்சியான பிரிக்ஸ் மாநாடாக இதுவும் அமைந்துள்ளது. இந்த மாநாடு இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் தலைமையில் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானிய அரசியலில் புதிய மாற்றம்? வெஸ் ஸ்ட்ரீட்டிங் மீது அதிகரிக்கும் கவனம்

  • May 16, 2026
  • 0 Comments

 பிரித்தானிய அரசாங்கத்தில் இருந்து ராஜினாமா செய்துள்ள Wes Streeting இன்று முக்கிய அரசியல் உரையாற்ற உள்ளார். அவர் தொழிலாளர் கட்சியின் தலைமைப் போட்டியில் தற்போது நேரடியாக களமிறங்கவில்லை என்றாலும், கட்சிக்கான தனது புதிய பார்வையை வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொழிலாளர் கட்சியின் முக்கிய இளம் தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் ஸ்ட்ரீட்டிங், குறிப்பாக சுகாதாரத் துறை மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் குறித்த தனது கருத்துகளால் கவனம் பெற்றுள்ளார். எதிர்காலத்தில் பிரதமர் பதவிக்குப் போட்டியிடும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. […]

இந்தியா செய்தி

நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வலியுறுத்தி திக, திமுக, விசிக, இடதுசாரிகள் போராட்டம்

  • May 16, 2026
  • 0 Comments

நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் திராவிடர் கழகம், திமுக, விசிக, இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டன போராட்டம் நடத்தின. நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வலியுறுத்தி இன்று மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு திராவிடர் கழகம் அழைப்பு விடுத்திருந்தது. இந்த போராட்டத்துக்கு திமுக, விசிக, இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. இன்று சென்னை எழும்பூரில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் விசிக […]

உலகம் செய்தி

தைவானை பாதுகாக்குமா அமெரிக்கா? ட்ரம்பிடம் நேரில் வினா தொடுத்த சீன ஜனாதிபதி!

  • May 15, 2026
  • 0 Comments

சீன ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது, தைவான் விவகாரம் குறித்து தான் எந்தவொரு உறுதிமொழியையும் வழங்கவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். சீன விஜயத்தை நிறைவு செய்து வாஷிங்டன் திரும்பும் வழியில் விமானத்தில் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தைவானுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அமெரிக்கா அதைப் பாதுகாக்குமா என்று சீன ஜனாதிபதி தன்னிடம் நேரடியாகக் கேட்டதாகவும், அதற்கு “நான் அதைப் பற்றிப் பேச விரும்பவில்லை” என்று பதிலளித்தாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். மேலும், […]

உலகம் செய்தி

ட்ரம்பின் விஜயத்தையடுத்து சீனாவில் களமிறங்குகிறார் புடின்!

  • May 15, 2026
  • 0 Comments

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் விரைவில் பெய்ஜிங்கில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக கிரெம்ளின் மாளிகை அறிவித்துள்ளது. இந்த உயர்மட்ட சந்திப்பின் போது அமெரிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின், சீனப் பயணம் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே முடிவடைந்துவிட்டதாக ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம் செய்த நிலையில், ரஷ்ய ஜனாதிபதியும் அங்கு […]

உலகம் செய்தி

உலக எரிசக்தி சந்தையின் செல்வாக்கை அமெரிக்கா அபகரிக்க முயல்கிறது -ரஷ்யா குற்றச்சாட்டு

  • May 13, 2026
  • 0 Comments

உலகளாவிய எரிசக்தித் துறையில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்த முயல்வதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் குற்றம் சாட்டியுள்ளார். டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான கொள்கைகள், உலக எரிசக்தி சந்தையின் செல்வாக்கை “அபகரிக்க” முயல்கின்றன என அவர் விமர்சித்துள்ளார். லுகோயில் மற்றும் ரோஸ்நெஃப்ட் போன்ற ரஷ்ய எரிசக்தி நிறுவனங்களை சர்வதேச சந்தைகளிலிருந்து வெளியேற்றுவதே அமெரிக்காவின் நோக்கம் என தெரிவித்துள்ளார். அவர் RT இந்தியா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அமெரிக்கா வெளியிட்ட சில கொள்கை ஆவணங்களில் உலக எரிசக்தி சந்தையில் […]

error: Content is protected !!